மகாராஷ்டிராவில் கனமழையால் அணை உடைந்து 6 பேர் உயிரிழப்பு! 18 பேர் மாயம்!

PUBLISHED ON: July 3, 2019 | Duration: 3 min, 29 sec

  
loading..
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரி அணை நேற்றிரவு திடீரென உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதில் அணைக்கு அருகில் இருந்த 12 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். மும்பையில் இருந்து 275 கிமீ தொலைவில் உள்ள ரத்னகிரி மாவட்டத்திற்கு விரைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர், அங்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசாங்க அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட கூடுதல் மீட்புக் குழுக்களும் விரைந்து பணியாற்றி வருகின்றன.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................