அசாமில் வெள்ள பெருக்கு : 11 பேர் பலி, 26 லட்சம் மக்கள் பாதிப்பு | Read

PUBLISHED ON: July 15, 2019 | Duration: 2 min, 20 sec

  
loading..
அசாமில் கொட்டிதீர்த்த பருவமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தின் 27 மாவட்டங்களில் குறைந்தது 21 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.பிரம்மபுத்திர உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.27,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் 7,000க்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் 68 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................