கும்பமேளாவில் புனித நீராடினால் மோட்சம், எப்படித் தெரியுமா?

PUBLISHED ON: January 25, 2019 | Duration: 1 min, 21 sec

  
loading..
கும்பமேளாவில் பல சடங்குகள் செய்யப்பட்டாலும், புனித நீராடுவது அதன் தலையாயச் சடங்காக இருக்கிறது. கும்பமேளா கூடலையொட்டி, திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர். இப்படி புனித நீரில் முங்கி எழுவதால், பாவங்கள் அனைத்தும் கரைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. இப்படிச் செய்வதன் மூலம், மறுபிறவியிலிருந்து விடுபட்டு, மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். புனித நீராடுவதைத் தவிர, பக்தர்கள் நதியின் கரையில் தரிசனம் செய்வதும் வழக்கம். அப்போது சாதுக்களின் பூஜைகளிலும் அவர்கள் கலந்து கொள்வார்கள். கும்பமேளாவின் போது, நதியானது அமிர்தத்தால் நிரம்பும் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே, புனித நீரில் குளிக்க பக்தர்களுக்கு வாழ்நாள் வாய்ப்பாக கும்பமேளா நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................