பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் ஆர்.பி.ஐ துணை ஆளுநர் ராஜினாமா எனத் தகவல்

PUBLISHED ON: June 24, 2019 | Duration: 2 min, 22 sec

  
loading..
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கும் வைரல் ஆச்சார்யா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் சில மாதங்களுக்கு முன்னர், தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, இந்த செய்தி வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் முரண் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் மத்தியில் புதியதாக அமைந்துள்ள அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி விகிதம் குறைந்துள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................