உலகின் வயதான யூ-ட்யூபர் 107 வயதில் காலமானார்!

தனது கையால் சமைத்து பழைய முறைப்படி அம்மிக்கல்லில் அரைத்து சமைப்பது தான் ம‌மஸ்தானம்மாவின் ரூசியான சமையலுக்கு காரணம் என்கின்றனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
உலகின் வயதான யூ-ட்யூபர் 107 வயதில் காலமானார்!

சில வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆந்தரகஷாரி மஸ்தானம்மா எனும் வயதான பாட்டு வீட்டில் சமையல் செய்து யூ-ட்யூப் வீடியோக்களை கன்ட்ரி ஃபுட்ஸ் எனும் சேனல் மூலமாக பதிவேற்றி பிரபலமானார். உலகிலேயே 100 வயதுக்கு மேல் உள்ள ஒரே யூட்யூபர் என்ற பெருமையை பெற்றிருந்தார் மஸ்தானம்மா. அவர் தனது 107வது வயதில் மறைந்துள்ளார்.

அவரது சேனலில் அவரது இறுதி ஊர்வலம் பதிவேற்றப்பட்டது. அது அவரது ஃபாலோயர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.. திற‌ந்தவெளியில் மிகவும் எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்து சமைக்கும் மஸ்தானம்மா ஆந்திராவின் க்ரிஷ்ணா கிராமத்தை சேர்ந்தவர்.

மஸ்தானம்மா சமையலுக்கான பெரிய கல்லூரியில் சேர்ந்து படிக்க வில்லை. ஸ்டார் ஹோட்டல்களில் பணிபுரியவில்லை. தனது கையால் சமைத்து பழைய முறைப்படி அம்மிக்கல்லில் அரைத்து சமைப்பது தான் ம‌மஸ்தானம்மாவின் ரூசியான சமையலுக்கு காரணம் என்கின்றனர்.

சென்றமுறை அவரது பிறந்த நாளின் போது அவரது சேனலில் பதிவிட்டிருந்து வீடியொவில் பாகிச்தானில் இருந்தெல்லாம் பாராட்டு வந்ததாக மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர்.

மஸ்தானம்மா ருசிகரமான உணவுகளை சமைப்பதில் திறன்மிக்கவர். தர்பூசணி சிக்கன் முதல் சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் வரை அனைத்தையும் சமிப்பதில் வல்லவர். கிட்டத்தட்ட அவரது சமையலை கிராமத்தி கே.எஃப்.சி என வர்ணித்துள்ளனர்.

மஸ்தானம்மா குறித்து ஹைத்ராபாத்தை சேந்த இருவர் முதல் முறையாக செய்தி வெளியிட்டனர். அதன்பின் பலர் இவரை பேட்டிக்கண்டுள்ளனர். 2016ம் ஆண்டு யூ - ட்யூப் சேனல் ஆரம்பித்து 200க்கும் அதிகமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................