“நீங்கள் அறைந்தால் கூட ஆசீர்வாதம்தான்”- மம்தாவுக்கு பிரதமரின் ‘அடடே’ ரிப்ளை

7 கட்டங்களாக நடக்கும் மக்களவை தேர்தலின், அனைத்து கட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS

மே 23 ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். 


Purulia: 

இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  “ஜனநாயகத்தின் வழியாக பிரதமர் மோடியை ஓங்கி அறைய வேண்டும்” என்று பேசினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று மேற்கு வங்கத்தில் பிராசரத்தில் ஈடுபட்டிருந்த மோடி, “மம்தாவிடமிருந்து அறை வாங்கினால் கூட, அதை ஆசீர்வாதமாகத்தான் எண்ணுவேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார். 

அவர் மேலும் இது குறித்து பேசுகையில், “மம்தா, என்னை அறைய வேண்டும் என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். உங்களிடமிருந்து அறை வாங்கினால் கூட ஆசீர்வாதம் தான்.

நான் அதை ஏற்றுக் கொள்வேன். ஆனால், ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். உங்கள் கூட்டாளிகளையும் அறைவதற்கு நீங்கள் தயக்கம் காட்டியிருக்கவில்லை என்றால், சிட் ஃபண்டு முறைகேடு நடந்திருக்காது. நீங்களும் இவ்வளவு பயத்துடன் இருந்திருக்க மாட்டீர்கள்” என்று உரையாற்றினார். 

முன்னதாக பிரசாரக் கூட்டத்தில் ஒன்றில் பேசிய போது மம்தா, “எனக்கு, பணம் ஒரு பொருட்டே அல்ல. அதனால்தான் நரேந்திர மோடி வங்கத்துக்கு வந்து, என் கட்சி மீது அபாண்டமாக குற்றம் சாட்டி வருகிறார். ஜனநாயகத்தின் வழியாக பிரதமர் மோடியை ஓங்கி அறைய வேண்டும்” என்றார். 

cjhtr7t

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேற்கு வங்கத்தில் நீடித்து வந்த இடதுசாரிகள் ஆட்சியை மம்தா பானர்ஜி, 2011 ஆம் முடிவுக்கு கொண்டு வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை மேற்கு வங்கம், மம்தாவின் கோட்டையாகத்தான் உள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பாஜக, வங்கத்தில் கணிசமாக வளர்ந்துள்ளது.

இந்த முறை நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பாஜக, வங்கத்தில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதனால் திரிணாமூல் காங்கிரஸுக்கும் பாஜக-வுக்கும் இடையில் அரசியல் களத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. 

7 கட்டங்களாக நடக்கும் மக்களவை தேர்தலின், அனைத்து கட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. மே 23 ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................