மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதற்காக தாக்கப்பட்ட இளைஞர்: 4 பேர் கைது

முஸ்லீம் இளைஞரான முகம்மது பைசான் மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சிலர் இந்த முகநூல் பதிவுக்கு கண்டித்து சண்டையிட்டுள்ளனர். பின் முஸ்லீம் இளைஞனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதற்காக தாக்கப்பட்ட இளைஞர்: 4 பேர் கைது

நாகை அருகே மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்த இளைஞர் தாக்கப்பட்டார்.

நாகப்பட்டினம் அருகில் உள்ள பொரவச்சேரியைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞரான முகம்மது பைசான் மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

சிலர் இந்த முகநூல் பதிவுக்கு கண்டித்து சண்டையிட்டுள்ளனர். பின் முஸ்லீம் இளைஞனை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட இளைஞரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக 4 பேரான தினேஷ் குமார் (28) அகத்தியன் (29) கணேஷ் குமார் (27), மோகன் குமார் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரின் தெரிவித்தார்.

கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................