This Article is From Dec 06, 2018

தெலுங்கானாவிலும் பெயர்மாற்றம்! யோகி ஆதித்தியநாத்தின் பரபரப்பு பேச்சு

உத்தர பிரதேசத்தில் உள்ள பல முக்கிய மாவட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததால் சமூக வலை தளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரப்படும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்

தெலுங்கானாவிலும் பெயர்மாற்றம்! யோகி ஆதித்தியநாத்தின் பரபரப்பு பேச்சு
Hyderabad:

உத்தர பிரதேசத்தில் உள்ள பல முக்கிய மாவட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததால் சமூக வலை தளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரப்படும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் தற்போது தெலுங்கானாவில் நடந்து வரும் பிரசாரத்தில் பா.ஜ.க ஆட்சியமைத்தால் அங்குள்ள கரீம்நகரையை ‘காரிபுரம்' என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தையும் ‘பாக்யாநகர்' என்ற பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.

முகலாய ஆட்சியின் போது வைக்கப்பட்ட பல பெயர்களை தற்போதைய மத்திய அரசு மாற்ற முடிவெடுத்துள்ளது. அலாகாபாத், ஃபாஸியாபாத் போன்ற நாட்டின் பல முக்கிய நகரங்களை பிராயாகராஜ் மற்றும் அயோத்யாவாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் தெலுங்கானாவை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினரான ராஜா சிங் லோத் மேடை பேச்சுகளில் பலமுறை அங்குள்ள மாவட்டங்களின் பெயரை மாற்றப்போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும் பா.ஜ.கவின் மற்றொரு உறுப்பினர் ஜகன் பிரசாத் கார்க் கூறுகையில் ஆக்ரா என்னும் பெயருக்கு அர்த்தமே இல்லை என்பதால் அவ்விடத்தை ‘அகர்வான் அல்லது அகராவால்' ஆக மாற்றப்பட வேண்டும் என தெரிவித்தார். அதற்கு காரணமாக அங்கு வனங்கள் அமைந்து இருப்பதாகவும் அகர்வால் இனத்தினர் அங்கு வசிப்பதால் இப்புதிய பெயர்களுக்கு அர்த்தம் கிடைக்கும் என பேசினார்.

இதைப் பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்கள் செய்து வரும் நிலையில், பா.ஜ.கவின் தோழமை கட்சியை சேர்ந்த ஓம் பிரகாஷ் ராஜ்பகார் “ஆக்ரா நகரத்திற்கு பெயர் மாற்றுவதற்கு முன் பாஜகவில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களான மத்திய அரசின் செய்தி தொடர்பாளர்களான ஷாஹானவாஸ் ஹுசேயின், மத்திய அமைச்சர் மூக்தர் அப்பாஸ் நாக்கீயு, உத்தர பிரதேச மாநில அமைச்சர் மொஹாசின் ராசா ஆகியோர்களின் பெயர்களை மாற்றவேண்டும்” எனத் தடாலடியாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

.