அமைச்சரவை, உயர் அதிகாரிகள் கூட்டத்திற்கு மொபைல் ஃபோன்களை தடை விதித்த முதல்வர்!!

முக்கிய பிரச்னைகளை விவாதிக்கும்போது கவனம் முழுவதும் அதில்தான் இருக்க வேண்டும் என்றும், கவனச்சிதைவு ஏற்படக்கூடாது என்றும் தலைமை செயலக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அமைச்சரவை, உயர் அதிகாரிகள் கூட்டத்திற்கு மொபைல் ஃபோன்களை தடை விதித்த முதல்வர்!!

உத்தரபிரதேசத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் காட்சி.


Lucknow: 

அமைச்சரவை மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்திற்கு மொபைல் ஃபோன்களை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார். 

இதுகுறித்து உத்தரபிரதேச  தலைமை செயலக உயர் அதிகாரிகள் கூறும்போது,'முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்போது கவனம் முழுவதும் அவற்றில்தான் இருக்க வேண்டும். மொபைல் ஃபோன்கள் கூட்டத்தின்போது அனுமதிக்கப்பட்டால் கவனச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. சில அமைச்சர்கள் தங்களுக்கு வாட்ஸப்பில் வரும் செய்திகளை படித்துக் கொண்டிருக்கின்றனர்' என்றார். 

இதேபோன்று எலக்ட்ரானிக் சாதனங்கள் ஹேக் செய்யப்பட்டால் அவற்றின் மூலம் தகவல்கள் கசியும் என்பதாலும், மொபைல் ஃபோன்களுக்கு அமைச்சரவை கூட்டத்தின்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அமைச்சர்கள் ஃபோன் கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சைலன்ட் மோடில் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். 

தற்போது மொபைல்களுக்கென தனி கவுன்ட்டர் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் மொபைல் ஃபோன்களை கொடுத்து விட்டு டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். கூட்டம் முடிந்த பின்னர் டோக்கனை அளித்து போன்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................