விவசாயிகளை காண தமிழகம் வந்த யோகேந்திர யாதவ் கைது!

சுயஆட்சி இந்தியா கட்சியின் அகில இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் - Yogendra Yadav, Tamil Nadu

 Share
EMAIL
PRINT
COMMENTS
விவசாயிகளை காண தமிழகம் வந்த யோகேந்திர யாதவ் கைது!

திருவண்ணாமலை விவசாயிகளை பார்க்கவிடாமல் போலீஸார் தன்னை தடுத்ததாக யோகேந்திர யாதவ் குற்றம் சாட்டினார்


New Delhi: 

திருவண்ணாமலை மாவட்டத்தில், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளை நேரடியாக சந்திக்கவும் தகவல் திரட்டவும் சென்ற சுய ஆட்சி இந்தியா கட்சியின் அகில இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவை தமிழக காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் யோகேந்திர யாதவ் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களுக்கு வந்த அழைப்பின் பேரில், 8 வழிச்சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகளைக் காண திருவண்ணாமலை வந்தோம். ஆனால், தமிழக காவல் துறையினர் விவசாயிகளை காண தடை விதித்தனர். மேலும், எங்களது கைப்பேசிகளை கைப்பற்றி, வலுக்கட்டாயமாக காவல் துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர்” என்று பதிவு செய்துள்ளார்.

10,000 கோடி ரூபாய் செலவில் உருவாக உள்ள சென்னை - சேலம் இடையேயான எட்டு வழிச் சாலை திட்டத்தினால், விவசாய நிலங்களும், மரங்களும் அழிக்கப்படும் என்பதற்காக இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................