சொகுசு விடுதியில் யோகா செய்த பாஜக எம்எல்ஏக்கள்! - நம்பிக்கை வாக்கெடுப்புக்கு காத்திருப்பு!

பெங்களூரில் உள்ள ராமாடா சொகுசு விடுதியில் தங்கியுள்ள பாஜக எம்எல்ஏக்கள் தங்கள் கை, கால்களை தூக்கி யோகாவில் ஈடுபட்டுள்ள வீடியோக்கள் வெளியானது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சொகுசு விடுதியில் யோகா செய்த எம்எல்ஏக்கள்.


Bengaluru: 

ஹைலைட்ஸ்

  1. பாஜக எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
  2. எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து, ஆளும் அரசுக்கு நெருக்கடி
  3. கூட்டணி அரசின் தலைவிதியை முடிவு செய்ய உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு

சொகுசு விடுதியில் உள்ள கர்நாடகா பாஜக எம்எல்ஏக்கள் இன்று காலை யோகா செய்து தங்களது நாளை தொடங்கினர். சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியின் தலைவிதி இன்று முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், எம்எல்ஏக்கள் கட்சி தாவாமல் இருக்க பாஜக தலைமை அவர்களை பெங்களூரில் உள்ள ராமாடா சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளது. இந்த சூழலில் பாஜக எம்எல்ஏக்கள் விடுதியில் இன்று காலை யோகா செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. 

இதனிடையே, வெள்ளியன்று, சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, பாஜக-வை கடுமையாக எச்சரித்தார். தனது 14 மாத அரசை கவிழ்க்கவே பாஜக அனைத்து சதி வேலைகளையும் செய்ததாக தெரிவித்தார்.

அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.40-50 கோடி வரை வழங்குவதாக பாஜக பேரம் செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டினார். இதனிடையே, பேசிய மாநில எதிர்க்கட்சித் எடியூரப்பா, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

sjb7gq2g

அதற்கு பதிலளித்த குமாரசாமி, '14 மாதம் ஆட்சியில் இருந்த நாங்கள் இறுதிகட்டத்திற்கு வந்துவிட்டோம். சில விஷயங்களை விவாதிக்கலாம். நீங்கள் கண்டிப்பாக ஆட்சி அமைக்கலாம். அதற்கு அவரசம் இல்லை. அதனை நீங்கள் திங்கள் அல்லது செவ்வாய்கிழமையில் மேற்கொள்ளலாம். நான் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப் போவதில்லை' என்று கூறினார். 

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 16 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆகக் குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 

ஆனால் அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும். எனவே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது. பாஜக-வுக்கு 105 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதனிடையே, சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர் பாஜக-வுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயரும்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................