உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா: பிரதமர் மோடி

Yoga Day 2019: 5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் மோடி தலைமையில் மாபெரும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மற்ற அமைச்சர்கள் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Yoga Day 2019: 30 ஆயிரம் பேருடன் இணைந்து பிரதமர் மோடி யோகா செய்தார்.


New Delhi: 

5-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரது, தலைமையில் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா செய்தனர். வெளிநாடு வாழ் இந்தியர்களும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளது. அமைதியான உலகை உருவாக்குவதில் யோகா முக்கிய பங்கு வகுக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக யோகா விளங்குகிறது.

யோகாவிற்கும் உடல்நலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, யோகாவின் பயன்கள் ஏழைகளையும் சென்றடைய வேண்டும். யோகாவின் பயன்களை உலக நாடுகள் அனுபவித்து வருகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம்; யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது. தினந்தோறும் நாம் அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, அனைவருக்கும் யோகா தின வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், அத்துடன் சர்வதேச அளவில் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கு நன்றியும் தெரிவித்தார்.

அதன் பின்னர் பிரதமர் மோடி யோகா செய்ய தொடங்கினார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோக செய்து வருகின்றனர். இதற்காக ராஞ்சி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்பட்டுள்ளன.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................