This Article is From Feb 12, 2020

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - சீனாவில் 44,200 பேருக்கு பாதிப்பு!!

Coronavirus: சீனா, வுஹான் நகரில் மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 

விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - சீனாவில் 44,200 பேருக்கு பாதிப்பு!!

Coronavirus: சீனா இரண்டு சுகாதார அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • சீனா இரண்டு மூத்த சுகாதார அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது.
  • புதிதாக 1,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
  • விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - சீனாவில் 44,200 பேர் பாதிப்பு
Beijing, China:

Coronavirus: சீனா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1,110 பேர் உயிரிழந்துள்ளனர். ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவலின்படி, கடந்த புதைக்கிழமை அன்று மட்டும் சுமார் 94 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹூபே மாகாணத்தின் சுகாதார அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய இந்த நோயால், தற்போது புதிதாக 1,638 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சீனா முழுவதும் 44,200 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் தலைமையில் ஜெனீவாவில் நடந்த கலந்தாய்வில், பரவி வரும் இந்த வைரஸ் நோய்க்கு "COVID-19" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கூறுகையில், சீனாவில் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பலர் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் இந்த நோய் தொற்று உலக நாடுகள் அனைத்திற்கும் பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவித்தார். உலக நாடுகள் அனைவத்தும் இந்த நோய் குறித்த ஆய்வு பட்டியலை உடனடியாக பகிர்வதன் மூலம் இது குறித்து இன்னும் பல ஆய்வுகளை செய்யமுடியும் என்றும் அவர் கூறினார்.     

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக லட்சக்கணக்கான மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள நிலையில் சீனா இரண்டு சுகாதார அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் வுஹான் நகரில் மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 
 

.