அமித் ஷா பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விரிப்புகளை திருட முயற்சி!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று பல்வேறு உலக நாடுகளில் இந்தியா சார்பாக யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அமித் ஷா பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விரிப்புகளை திருட முயற்சி!!

இந்தியாவின் வலியுறுத்தலால் ஜூன் 21-யை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.

Haryana:

அமித் ஷா பங்கேற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர், விரிப்புகளை எடுத்துச் செல்ல முயன்றனர். இதுதொடர்பாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று உலக நாடுகள் முழுவதும் இந்தியா சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். 
 


யோகா நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்தவர்களில் சிலர் விரிப்புகளை எடுத்துச் செல்ல முயன்றனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா உலகத்தின் நன்மைக்கு யோகா சிறந்தது. இதனை உலக அளவில் பிரதமர் மோடி கொண்டு சென்றார் என்று பேசினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்தியாவின் வலியுறுத்தலை தொடர்ந்து ஜூன் 21-ம்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது. 

With inputs from ANI

Listen to the latest songs, only on JioSaavn.com