This Article is From Mar 20, 2019

உலக சிட்டுக்குருவி தினம்: ட்விட்டரில் மக்களின் கருத்துகள் என்ன?

World Sparrow Day: உலகின் வெவ்வேறு இடங்களில் 2010 முதல் சிட்டுக் குருவி தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சிட்டுக்குருவி தினம்: ட்விட்டரில் மக்களின் கருத்துகள் என்ன?

World Sparrow Day: உலக சிட்டுக் குருவி தினத்தில் ட்விட்டர்வாசிகளின் கருத்துகள்

New Delhi:

இன்று உலக சிட்டுக் குருவி தினம், சிட்டுக்குருவியின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்படுகிறது. இது சர்வதேச அளவிலான முயற்சியாகும். நேச்சர் ஃபாரெவர் சொஸைட்டி என்ற அமைப்புடன் இணைந்து பிரான்சின் இயற்கை சுற்றுச்சூழல் சங்கம் (Eco-Sys Action Foundation)இந்த முயற்சிகளை நாடாளவிலும், உலகளவிலும் முன்னெடுத்து வருகிறது. நேச்சர் ஃபார்ரெவர் சொஸைட்டியை முகம்மது திலாவரால் தொடங்கப்பட்டது. உலகின் வெவ்வேறு இடங்களில் 2010 முதல் சிட்டுக் குருவி தினம் கொண்டாடப்பட்டது. 

இந்த நாளில் பறவைகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் பெருக்கம் குறித்து காத்திரமான செயல்களை முன்னெடுக்க உதவுகிறது. காடுகளை அழித்து கட்டடங்கள் கட்டியபின் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதனால் அதன் எண்ணிக்கை அதிகரிக்க பலரும் இன்றைய நாளில் தங்கள் வீடுகளில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். அதை ட்விட்டர் தளத்திலும் வெளிப்படுத்தியுள்ளனர். அதில் ஒரு ட்விட்டர்வாசி “காலையில் அலாரம் வைத்து எழுந்திருப்பதில்லை.சிட்டுக் குருவிகளின் சத்தம்தான் காலை நேர அலாரமாக இருக்கும். அவற்றைக்  காப்பாற்ற உறுதிஎடுத்துக் கொள்ளுங்கள். கோடையில் தண்ணீர் இல்லாமல் பல சிட்டுக் குருவிகள் இறக்கின்றன. ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும் வைப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள் என்கிறார். 

 

மற்றொருவர் “நான் சிறுவயதில் பார்த்தது இன்று பார்ப்பதே அறிதாகிவிட்டது. மனிதர்கள்தான் மற்ற உயிர்களுக்கு ஆபத்தானவர்கள் எனத் தெரிவித்திருந்தார்”
 

குருவிகள் வாழுமிடமாக நகரத்தை மாற்றுங்கள். ஒருவர் ஒரு மரத்தை நடுவதற்கு உறுதி மொழி எடுங்கள் என்று கூறியிருந்தார். 
 

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் மற்றொரு கிண்ணத்தில் தானியங்களையும் வையுங்கள் என்று கூறியிருந்தார். 

உலக சிட்டுக் குருவி தினத்தில் இந்த பொறுப்பினை அனைவரும் ஏற்றுக் கொள்வது மிகவும் அவசியம்.உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

.