உலக தூக்க தினம்: தூக்கத்தைப் பெறுவதற்கு நெட்டிசன்கள் கூறும் அறிவுரைகள்!

ஆண்டுதோரும் மார்ச் 15 ஆம் தேதி உலக தூக்க தினமாக கொண்டப்படுகிறது.

உலக தூக்க தினம்: தூக்கத்தைப் பெறுவதற்கு நெட்டிசன்கள் கூறும் அறிவுரைகள்!

உலக தூக்க தினம்; நெட்டிசன்கள் கூறும் வழிகள்

உலகம் முழவதும் தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க இன்று, உலக தூக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வை 'உலகம் தூக்க தினக் குழு' நடத்தி வருகிறது.

இதன் முக்கிய கருத்தாக நல்ல இரவு தூக்கம் மற்றும் தூக்கத்தை தவிற்பதால் வரும் பிரச்னைகள் குறித்து எடுத்து சொல்லப்படுகிறது. நல்ல தூக்கத்தின் விளைவை நாம் எல்லாரும் அறிவோம். ஒரு நல்ல இரவு தூக்கம் மன அழுத்தத்தை குறைத்து உடலுக்குத் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அதே சமயத்தில் ஒருவரின் தூக்கம் சரியில்லை என்றால் அதிக மன அழுத்தத்தால் இருதய நோய் வரை ஏற்படலாம். சமீபத்திய ஓர் ஆராயிச்சியின் முடிவில், தூக்கம் சரியாகயில்லை என்றால் மரபணுவில் பாதிப்பு ஏற்படலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் தூக்கத்தைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. அதிகமான நோரம் போன் மற்றும் கணினி முன் இருப்பது, காபி மற்றும் தேநீரை அதிகளிவில் பருகுவது மற்றும் அதிகளவு உடற் அசைவு இல்லாதது போன்ற பல காரணங்கள் தூக்கத்தை பாதிக்கின்றன. இன்று உலக தூக்க தினத்தையொட்டி, நெட்டிசன்கள் வகுத்திருக்கும் பிரபலமான தூக்கத்தைப் பெறுவதறக்கான வழிகளைப் பார்போம்.

நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான சில டிப்ஸ்:

 

1. படுக்கைக்கு செல்வதற்கு முன் குளியல் ஒருவரின் தூக்கத்தை மேன்படுத்தும்.

 

2. தூக்கத்தை தடுக்கும் விஷயங்களை என்னவென்று கண்டறிந்து ஒரு கையேட்டில் குறித்துக்கொள்வது நமது தூக்கத்தின் அளவை கண்டறிய உதவுகிறது.

 


3.ஒரு இலகுவான போர்வையை உடலின் மீது போத்திக்கொண்டால் நல்ல தூக்கம் வரும் என்ற கருத்தை பெரும்பாலோனோர் குறிப்பிட்டுள்ளனர். 

 

4. ஏஸ்எம்ஆர் மற்றும் வையிட் நாய்ஸ் எனப்படும் ஒரு நல்ல ஸ்கால்ப் மசாஜ் செய்துகொள்ளவது தூக்கத்தை மேம்படுத்தும் என்பதை பல நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

5. உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஏற்படும் அசதி காரணமாகவும் தூக்கம் வரலாம்.

 

6. போன், லேப்டாப் போன்றவற்றின் பயன்பாட்டை குறைப்பது, தூக்கத்தின் அளவை அதிகரிக்கும்.
 


7. தியானம் மற்றும் இனிமையான பாட்டு கேட்பதன் மூலம் எளிதில் தூக்கம் வரும் என்பது பலரும் அறிந்த ஒரு தகவல்!

இப்படி சமூக தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், வாசகர்கள் ஆகிய நீங்களும் இதுபோன்று முயற்சி செய்து நல்ல தூக்கத்தைப் பெருங்கள்!

Click for more trending news


More News