This Article is From Aug 12, 2019

இன்று உலக யானைகள் தினம், கொண்டாட தயாராகிவிட்டீர்களா?

பெரும்பாலும் ‘சிறப்பு தினங்கள்' எந்த ஒரு கொண்டாட்டத்திற்காகவும் அறிவிக்கப்படுவதில்லை.

இன்று உலக யானைகள் தினம், கொண்டாட தயாராகிவிட்டீர்களா?

World Elephant Day: அது போட்ஸ்வானா, பாலைவனத்தினாலும் டெல்டாவினாலும் ஆன ஒரு தென் ஆப்ரிக்க நிலப்பகுதி. அங்கு யானைகள் கொல்லப்படுவது என்பது ஒரு சாதாரனமான ஒரு நிகழ்வாகவே கடந்து செல்லப்பட்டது, ஆனால் இந்த யானையை தவிர. அந்த யானை கொல்லப்பட்ட விதமும், அதனை ஜஸ்டின் சுலிவென் ஆவணப்படுத்திய விதமும்தான், அங்கிருந்த நிலையை மாற்றக்காரணம்.

சுலிவென் எடுத்த அந்த புகைப்படம் உலக அரங்குகளில் எதிரொலித்தது. அதன் விளைவு அதை பற்றி அனைவரும் பேசினோம், யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டது என்பது விவாதமாக மாறியது, ஆனால் எவ்வளவு நாட்களுக்கு? இதையும் ஒரு சாதாரன விஷயமாக கடந்து சென்று விட்டோம். 

ஆனால் அப்படி சாதாரனமாக கடந்த செல்லக்கூடிய செய்தியல்ல இது. போட்ஸ்வானாவில் நாள் ஒன்றிற்கு குறைந்தது 100 யானைகளின் தந்தங்களாவது அறுக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும் திறன் கொண்டது என்பார்கள். ஆக, அங்கு ஒவ்வொரு நாளும் 100 காடுகள் மறைமுகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது போட்ஸ்வானாவின் நிலை மட்டுமே, இம்மாதிரி உலகின் பல இடங்களில், பல யானைகள் வேட்டையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படி நாம் இதை ஓர் சாதாரனமான ஒரு செய்தியாக கடந்து செல்லவில்லை என்றால், அதே நேரத்தில், சிங்கப்பூரில் கடத்தப்பட்ட 300 ஆப்ரிக்க யானைகளின் 8.8டன் எடை கொண்ட தந்தங்கள் கைப்பற்றப்பட்டதையும் கவணித்திருப்போமே. யானைகளின் தந்தக்களுக்கான சந்தையில், இந்த தந்தங்களுக்கான மதிப்பு 12.9 மில்லியன் டாலர்கள், சுமார் 90 கோடி ரூபாய்.

இவ்வளவு விலை கொடுத்து தந்தங்களை வாங்குவது யார்?

நுகர்வோர்களாகிய நாம்தான், யானை தந்தத்தினாலான ஆபரணங்கள் வேண்டும், யானை தந்தத்திலான பியானோ வேண்டும் என்று கேட்க தெரிந்த நமக்கு, அது எப்போது, எங்கு எந்த யானையை கொல்லப்பட்டு எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த கவலையும் இல்லையே!

ஏனென்றால், நமக்கு ஆபரணங்களும், பியானோக்களும் போதுமே!

இந்த சம்பவம் நடத்த சில நாட்களில், யானைகள் தினம் வந்துவிட்டது. நாமும், அனைத்தையும் மறந்து அந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

பெரும்பாலும் ‘சிறப்பு தினங்கள்' எந்த ஒரு கொண்டாட்டத்திற்காகவும் அறிவிக்கப்படுவதில்லை. ஒரு காரணி அழிவில் இருக்கிறது என்றாலோ அல்லது மிகவும் கவனிக்கப்படாமல் இருக்கிறது என்றாலோ அவற்றின் பேரில் ஒரு நாளை சிறப்பு தினமாக அறிவிப்பதுதான் உலக இயல்பு. அப்படியாக ஒன்றிற்கு இன்று சிறப்பு தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இங்கே நாட்களை கொண்டாடுவதற்கு காட்டப்படும் அக்கறை, உயிர்களை காப்பாற்றுவதற்குக் காட்டப்படுவதில்லை. 

.