This Article is From Jul 17, 2019

இந்தியாவுக்கு ஆதரவான தீர்ப்பு! குல்பூஷனின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது!!

உளவு பார்த்தார் என்று குற்றம்சாட்டி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் தூக்கு தண்டனை அளித்திருந்தது.

இந்தியாவுக்கு ஆதரவான தீர்ப்பு! குல்பூஷனின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது!!

இந்தியாவின் தலையீட்டால் தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது சர்வதேச நீதிமன்றம்.

ஹைலைட்ஸ்

  • உளவு பார்த்தார் என்று குற்றம் சாட்டுகிறது பாகிஸ்தான் அரசு
  • இந்தியா முழுவதும் குல்பூஷன் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது
  • 2016 மார்ச்சில் குல்பூஷன் யாதவ் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்
New Delhi:

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மீதான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அவரது மரண தண்டனை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவில் மரண தண்டனை வழங்கிய தீர்ப்பை பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியாவுக்கும், குல்பூஷன் ஜாதவுக்கும் ஆதரவான தீர்ப்பு வந்துள்ளதால் அவரது மரண தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது. 

49 வயதாகும் குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016 மார்ச்சில் கைது செய்யப்பட்டார். அவர் உளவு பார்த்து அந்த தகவல்களை இந்தியாவுக்கு அனுப்பியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதுதொடர்பான வழக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இதில் கடந்த 2017 மே மாதத்தில் குல்பூஷனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதில் இந்தியா தலையிட்டு சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாடியது. இதன்பின்னர் தற்காலிகமாக மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

வேண்டுமென்றே குல்பூஷனை கடத்தி பாகிஸ்தான் இந்த நடவடிக்கை எடுத்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. அவர் கடந்த 2016 மார்ச் 3-ல் பலூசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார் என்று பாகிஸ்தான் கூறியது. 

இரு நாடுகளின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் வழக்கு சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றது. இதில் தங்களது தூதர் கூட குல்பூஷனை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று இந்தியா குற்றம்சாட்டியது. 

ஆனால் தங்கள் நாட்டிற்கெதிராக குல்பூஷன் உளவு பார்த்தார் என்று பாகிஸ்தான் ஆதாரங்களை வாதத்தின்போது முன்வைத்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த சூழலில் இன்று தனது முடிவை அளித்துள்ள சர்வதேச நீதிமன்றம் குல்பூஷனின் மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.