''பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்'' - அனிதாவின் அண்ணன் அறிவிப்பு!!

மக்களவை தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதில் அளித்துள்ள அனிதாவின் அண்ணன் மணி ரத்னம் தெரிவித்துள்ளார்.

''பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்'' - அனிதாவின் அண்ணன் அறிவிப்பு!!

கமல்ஹசான் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று நீட் தேர்வில் உயிர் நீத்த அனிதாவின் அண்ணன் மணி ரத்னம் கூறியுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தேர்தல் பிரசார வீடியோவுக்கு பதில் அளித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

மக்களவை தேர்தலையொட்டி, யாருக்கு ஓட்டுப் போடப் போறீங்க என்று ஆரம்பிக்கும் வீடியோவை கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அரசியல் தலைவர்கள் பேச்சைக் கேட்டு டிவியை உடைக்கும் கமல், அதன்பின்னர் பேசத் தொடங்குகிறார். 

அந்த வீடியோவில், யாருக்கு வாக்களிக்க கூடாது என்று நீட் தேர்வில் உயிர்நீத்த அனிதாவின் பெற்றோரை கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள் யாருக்கு வாக்களிக்க கூடாது என்று என கமல் கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.

anitha neet family ndtv

இந்த நிலையில் கமலின் வீடியோவுக்கு அனிதாவின் அண்ணன் மணி ரத்னம் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து மணி ரத்னம் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது-

திரையிலும், நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன் கமல். மற்றவர்கள் என்ன நினைத்தாலும் தனக்கு எது சரியென படுகிறதோ அதனை செய்யும் துணிச்சல் கொண்டவர். அவரைப் பார்த்துதான் 18 முறை ரத்தா தானம் செய்துள்ளேன். 

கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாக இருக்கிறோம். பாசிச பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். 

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது. அதனால் திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவனுக்கே வாக்களிப்போம்.

இவ்வாறு அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.