This Article is From Oct 06, 2018

சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 600 பெண் போலீஸ் தேவை: தலைமை போலீஸ் அதிகாரி

கேரளா காங்கிரஸ் கட்சியினர் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக போரட்டம் நடத்தினர்.

சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 600 பெண் போலீஸ் தேவை: தலைமை போலீஸ் அதிகாரி

சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு 600 பெண் போலீஸ் தேவை என தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Kochi:

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பிற்காக பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்று கேரள காவல்துறை அதிகாரி லோக்நாத் பேஹேரே கூறியுள்ளார்.

சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதனால் 600 பெண் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் திருவாங்கூர் தேவசாம் பெண் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர், ரமேஷ் சென்னிதாலா கூறும்போது, ஆர்எஸ்எஸ் - பிஜேபி மற்றும் மாநில அரசுகள் இந்து சமூதாயத்தை ஏமாற்றி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

.