This Article is From Jul 16, 2019

சேலை கட்டி புகைப்படம் போடும் பிரபலங்கள்: ட்ராண்டாகும் #sareeTwitter

பெண்களின் உடலின் நளினத்தை நிச்சயம் சேலை வெளிப்படுத்தவே செய்கிறது.

சேலை கட்டி புகைப்படம் போடும் பிரபலங்கள்: ட்ராண்டாகும் #sareeTwitter

#sareeTwitter என்ற ஹேஸ்டேக் பிரபலம் ஆகி வருகிறது.

இந்தியாவில் பெண்களுக்கான உடையென்றால் பலரும் முதலில் சொல்வது சேலை மட்டுமே. எத்தனை விதமான நவநாகரீக உடை வந்தாலும் சேலைதான் பாரம்பரிய உடையென்றும் பெண்களின் அழகை வெளிப்படுத்தும் உடையாக கருதப்படுகிறது. பெண்களின் உடலின் நளினத்தை நிச்சயம் சேலை வெளிப்படுத்தவே செய்கிறது. 

இதோ ட்விட்டரில் இரண்டு நாளாக #sareeTwitter என்ற ஹேஸ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. சினிமா நடிகைகள், அரசியல் தலைவர்கள், சமூக வலைதள பயனாளர்கள் பெண்கள் பலரும் சேலை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி சேலை அணிந்த தன் புகைப்படங்களை  ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

   பாஜகவைச் சேர்ந்த நிபுர் ஷர்மா ட்விட்டரில் செய்த பதிவு

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  நக்மா மஞ்சள் நிற சேலை அணிந்த புகைப்படத்துடன் ட்விட்டாரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பல துறை பிரபலங்கள் சேலை அணிந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Click for more trending news


.