சூட்கேசுக்குள் அடைத்து வைக்கப்பட்ட 30 வயது பெண்ணின் சடலம்! போலீசார் விசாரணை!

பெண்ணின் சடலத்தில் ஆடைகள் ஏதும் களையப்படவில்லை. காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
சூட்கேசுக்குள் அடைத்து வைக்கப்பட்ட 30 வயது பெண்ணின் சடலம்! போலீசார் விசாரணை!

இளம்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் கருதுகிறது.

New Delhi: 

டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள பவானா என்ற இடத்தில் சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை திறந்து பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருந்தது. 

முதல்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண் 3-4 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

பவானா பகுதியில் மர்ம சூட்கேஸ் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. 

பெண்ணின் சடலத்தில் ஆடைகள் ஏதும் களையப்படவில்லை. காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சடலத்தின் அடையாளத்தை கண்டறியும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................