This Article is From Jun 30, 2019

சொந்த சாதியில் திருமணம் செய்ய மறுத்த சகோதரி: அடித்து உதைத்த சகோதரர்கள்

காவல்துறை விசாரணையில் 21 வயது பெண் ஒருவர் தலித் சமூகத்தை சேர்ந்த ஆணுடன் சென்று விட்டார். குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன்படி அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.

தன் சமூகத்தில் உள்ள ஆணை திருமணம் செய்யச் சொல்லி பெண்ணின் சகோதரர்களும் உறவினர்களும் கட்டாயப்படுத்தி அடித்துள்ளனர்.

Bhopal:

மத்திய பிரதேசத்தில் 21 வயது பெண் தன் சமூகத்திலிருக்கும் ஆணை திருமணம் செய்ய மறுத்ததால் சகோதரர்களும் உறவினர்களும் சேர்ந்து அடித்துள்ளனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் வீடியோவில் படம்பிடித்துள்ளனர். 

வீடியோ காட்சியில் வீடுகள் ஏதுமற்ற மலைப்பகுதியில் பெண்ணை இழுத்து அவளின் முதுகு, கால் ஆகிய இடங்களில் குச்சியை வைத்து அடித்துள்ளனர். இந்த சம்பவம் ஜூன் 25 அன்றூ நடந்துள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெகுவாக பரவியது. காவல்துறையினர் இந்த வீடியோவில் உள்ள வண்டி எண்ணை பார்த்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்துள்ளனர். 

காவல்துறை விசாரணையில் 21 வயது பெண் ஒருவர் தலித் சமூகத்தை சேர்ந்த ஆணுடன் சென்று விட்டார். குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன்படி அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். சில நாட்களுக்குப் பின் மீண்டும் தன் சமூகத்தில் உள்ள ஆணை திருமணம் செய்யச் சொல்லி பெண்ணின் சகோதரர்களும் உறவினர்களும் கட்டாயப்படுத்தி அடித்துள்ளனர். 

பெண்ணின் 4 சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 

.