எலிவேட்டரில் 3 நாள் சிக்கித் தவித்த பெண்; அமெரிக்காவில் விசித்திரம்!

கடந்த வெள்ளிகிழமை அவர்களின் வீட்டில் உள்ள எலிவேட்டரில் மரிதஸ் சிக்கி கொண்டார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
எலிவேட்டரில் 3 நாள் சிக்கித் தவித்த பெண்; அமெரிக்காவில் விசித்திரம்!

மூன்று நாட்களாக அந்த எலிவேட்டரிலையே மரிதஸ் தவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பெண் ஒருவர் எலிவேட்டரில் மூன்று நாட்கள் சிக்கி தவித்தார்.

53 வயதான மரிதஸ் ஃபார்தலிசா என்பவர், அமெரிக்காவின் பில்லினியர்களில் ஒருவரான ஸ்டிபன் என்பவரின் வீட்டில் வேலை செய்து வருகிறார். ஸ்டிபன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றுள்ளனர்.

கடந்த வெள்ளிகிழமை அவர்களின் வீட்டில் உள்ள எலிவேட்டரில் மரிதஸ் சிக்கி கொண்டார். மூன்று நாட்களாக அந்த எலிவேட்டரிலையே மரிதஸ் தவித்துள்ளார்.

ஸ்டிபன்ஸ் வீட்டில் உள்ள ஒருவர் கடந்த திங்கள் அன்று தான் மரிதஸ் எலிவேட்டரில் சிக்கி இருப்பதை கண்டுபிடித்தார். உடனே 911 யை உதவிக்கு அழைத்து மரிதஸை மீட்டுள்ளனர்.

மரிதஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ஸ்டிபன்ஸ் கூறுகையில், ‘இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இந்த இன்னலுக்கு நான் வருந்துகிறேன். மேலும் இது போல் இனி நடக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கையும் செய்யப்படும்' என்றார்.

Click for more trending news

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................