This Article is From Dec 06, 2019

திருமண விழாவில் ஆட்டம் பாட்டம்! போதையில் இளம்பெண் மீது துப்பாக்கிச்சூடு! - வீடியோ

இந்த வீடியோவானது, கடந்த டிச.1ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. கிராமத் தலைவர் சுதிர் சிங் படேலின் மகளின் திருமணத்தில் நடன நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

யாரும் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் முகத்தில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்கிறது. இதனை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • A man is heard saying: "Goli chal jayegi (shots will be fired)"
  • "Brother, you should fire the gun," another man is heard saying
  • The woman is then suddenly shot from behind
Lucknow:

உத்தர பிரதேசத்தின் சித்ரகோட் பகுதியில் திருமண விழா ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் நடனமாடுவதை நிறுத்திய பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், நடனக்குழுவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது குழுவினருடன் மேடையில் நடனமாடிக் கொண்டிருகிறார். அப்போது குடிபோதையில் இருக்கும் நபர் ஒருவர், நடனமாடுவதை நிறுத்தினால் சுட்டுவிடுவேன் என்கிறார். 

இதையடுத்து, அந்த பெண் ஆடுவதை நிறுத்துகிறார். தொடர்ந்து, உடன் இருக்கும் நபர் ஒருவர் (நீங்கள் கட்டாயம் துப்பாக்கியால் சுட வேண்டும் என்கிறார்). 

இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் முகத்தில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்கிறது. இதனை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

இந்த வீடியோவானது, கடந்த டிச.1ம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. கிராமத் தலைவர் சுதிர் சிங் படேலின் மகளின் திருமணத்தில் நடன நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆடலும் - பாடலும் நிகழ்ச்சியின் போது, மேடையில் நின்றுகொண்டிருந்த மணமகனின் மாமாக்கள் மிதிலேஷ் மற்றும் அகிலேஷ் ஆகியோரும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

கிராம தலைவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரே இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அந்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, நாங்கள் குற்றவாளியை கைது செய்ய முயற்சித்து வருகிறோம். இதற்காக எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, கான்பூரில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்த அந்த பெண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இதேபோல், கடந்த 2016ல் பஞ்சாபில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 25 வயது நடனக்கலைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். குல்விந்தர் கவுர் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஆடிக்கொண்டிருந்த போது வயிற்றிலே துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலே அந்த பெண் உயிரிழந்தார். 

இதேபோல், டெல்லியல் கடந்த வருடம் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, இளைஞர் ஒருவர் பாடல் மாற்றுவது தொடர்பாக பார் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டார். 
 

(With inputs from IANS, PTI)

.