This Article is From Dec 12, 2019

''உன்னாவோவை விட மோசமான சம்பவம் நிகழும்'' : பெண்ணை எச்சரிக்கும் நோட்டீசால் பரபரப்பு!!

டெல்லி முகர்ஜி நகரில் கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் ஒருவர் அது சம்பந்தமாக புகார் அளித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் புகார் பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் உன்னாவோ சம்பவத்தை விட மோசமான சம்பவம் நடக்கும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணை எச்சரிக்கும் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

''உன்னாவோவை விட மோசமான சம்பவம் நிகழும்'' : பெண்ணை எச்சரிக்கும் நோட்டீசால் பரபரப்பு!!

பாக்பாத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Baghpat:

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டபெண்ணுக்கு, உன்னாவோ சம்பவத்தை விட மோசமானதை எதிர்கொள்வாய் என எச்சரிக்கும் நோட்டீஸ் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. 

டெல்லியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், உத்தரப்பிரதேசத்தின் பாக் பாத்தில் வசித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு டெல்லி முகர்ஜி நகரில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளார். 

ஓராண்டுக்கு முன்பு தனது நண்பர் வீட்டுக்கு சென்றபோது, அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்தை, மது பானத்தில் கலந்து சோரன் சிங் என்பவர் கொடுத்துள்ளார். இதனால் மயக்கமடைந்த அவர், பின்னர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இது சம்பந்தமாக வீடியோவை எடுத்து குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியுள்ளார்.

இது சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூலை மாதத்தின்போது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
 

இந்த நிலையில் குற்றவாளி து செய்யப்பட்டு, புதன்கிழமையான நேற்று அவர் ஜாமீனில் வெளி வந்தார். இதன்பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் சுவரில், அவர் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்கு செல்லக் கூடாது என்றும்,  அவ்வாறு சென்றால் உன்னாவோ பெண்ணுக்கு நேர்ந்ததை விட மோசமான சம்பவம் உனக்கு நேரும் என்றும் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

தற்போது இந்த நோட்டீஸ்தான் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். 

ஜாமீனில் வெளி வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் பதானில் தங்கியிருந்த குற்றவாளி மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். டெல்லியில் பணியாற்றி வந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

உன்னாவோ பாலியல் பலாத்கார சம்பவத்தில், சாட்சியம் அளிப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவர் 6 பேர் கொண்ட கும்பலால் தீயிட்டு கொளுத்தப்பட்டார்.

90 சதவீத தீக்காயங்களுக்கு ஆளான அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு கூறியுள்ளது. 

பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறிவிட்டது என்று கூறி எதிர்க்கட்சியினர் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

.