ஜம்மூ காஷ்மீரில் வீடு புகுந்து துப்பாக்கிசூடு நடத்திய பயங்கரம்; ஒரு பெண் பலி!

உயிரிழந்த பெண்ணின் பெயர் நிகீனா பானோ என்று கண்டறியப்பட்டுள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜம்மூ காஷ்மீரில் வீடு புகுந்து துப்பாக்கிசூடு நடத்திய பயங்கரம்; ஒரு பெண் பலி!

இந்த சம்பவத்தில் முகமது சுல்தான் என்கின்ற இன்னொரு நபருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

New Delhi: 

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இருக்கும் ஓர் வீட்டிற்க்குள் தீவிரவாதிகள் புகுந்து, உள்ளே இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக போலீஸ் தரப்பு தகவல் தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தில் முகமது சுல்தான் என்கின்ற இன்னொரு நபருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

உயிரிழந்த பெண்ணின் பெயர் நிகீனா பானோ என்று கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த முகமது சுல்தான், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிகிறது. 

தீவிரவாதிகள் திடீரென்று, பானோ வீட்டிற்குள் புகுந்துள்ளதாக கூறுகிறது போலீஸ். ஆனால், எதற்கென்று இதுவரை தகவல் தெரியவில்லை. 

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................