This Article is From Jan 21, 2020

பாத்ரூமில் நுழைந்த மெகா சைஸ் பாம்பு; இந்தப் படங்கள் உங்களுக்கு அல்லு கொடுக்கும்..!

தற்போது அந்த பாம்பு, உள்ளூர் பெட் ஷாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாத்ரூமில் நுழைந்த மெகா சைஸ் பாம்பு; இந்தப் படங்கள் உங்களுக்கு அல்லு கொடுக்கும்..!

அந்த முகநூல் பதிவிற்கு பல ஷாக் கமென்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் வீட்டில் மிகப் பெரிய பாம்பு ஒன்று நுழைந்திருப்பதைக் கண்டு ஷாக் ஆகியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்ற உள்ளூர் போலீஸ், அந்தப் பாம்பின் படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. 

இங்கிலாந்தின் பிர்கென்ஹெட் பகுதியில் இருக்கும் வீட்டின் குளியல் அறையில்தான் போவா கான்ஸ்டிரிக்டர் (Boa constrictor) என்னும் 8 அடி பாம்பு நுழைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய பாம்புகளில் இதுவும் ஒன்று. 

பாம்பை நேரில் சென்று பார்த்து விசாரணை நடத்திய மெர்ஸீசைடு போலீஸ், இவ்வளவு பெரிய உயிரினம் எப்படி பாத்ரூமிற்குள் வந்தது என்பது குறித்து புகார் கொடுத்த பெண்ணிற்கோ அல்லது அக்கம் பக்கத்தினருக்கோ தெரிந்திருக்கவில்லை என்று கூறியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு, டிசம்பர் 30 ஆம் தேதி நடந்துள்ளதாகவும், தற்போதுதான் அந்த பாம்பின் 2 படங்கள் பகிரப்பட்டுவதாகவும் போலீஸ் தரப்பு சொல்கிறது. முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள படங்களில், அந்த பெரிய பாம்பு பாத் டப்பில் இருப்பதும், சிங்க்-ல் நெளிந்து கொண்டிருப்பதும் தெரிகிறது. 
 

அந்த முகநூல் பதிவிற்கு பல ஷாக் கமென்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. “இந்த பாம்பு என் பாத்ரூமில் இருந்திருந்தால் நான் அழுதே விட்டிருப்பேன்,” என்று ஒருவர் எழுத, இன்னொருவர், “இந்தப் படத்தைப் பார்த்ததால் எனக்கு கெட்டக் கெட்ட கனவுகள் வரப் போகின்றன,” என்று அச்சம் தெரிவிக்கிறார். 

போலீஸ் கான்ஸ்டபிள் ஈஸ்ட்வுட், அந்த பாம்பை பத்திரமாக பிடித்ததாக சொல்லும் போலீஸ், “மிகவும் அமைதியாக பாம்பை அணுகி, பத்திரமாக அதை மீட்டுவிட்டோம்,” என்கிறது. 

தற்போது அந்த பாம்பு, உள்ளூர் பெட் ஷாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Click for more trending news


.