மெட்ரோவில் இளம்பெண் முன்பு சுய இன்பம் செய்ததாக புகார்! வைரலாகும் பதிவு!!

குற்றச் செயலில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று குர்கான் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் தனது ட்விட்டர் பதிவை பிரதமர் மோடி மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் டேக் செய்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மெட்ரோவில் இளம்பெண் முன்பு சுய இன்பம் செய்ததாக புகார்! வைரலாகும் பதிவு!!

சம்பவம் நடந்தபோது தனக்கு உதவி செய்ய யாரும் வரவில்லை என்று இளம்பெண் கூறியுள்ளார்.


New Delhi: 

டெல்லி மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவரை பார்த்து இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இளைஞரின் கன்னத்தில் பளார் என்று அரை விட்டிருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் இளம்பெண் விடுத்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஹூடா சிட்டி சென்டர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. 

இளம்பெண் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

எஸ்கலேட்டரில் இருந்து நான் வெளியே வந்தபோது, ஏதோ தவறு நடப்பதைப் போன்று உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தபோது இளைஞர் ஒருவர் என்னைப் பார்த்து சுய இன்பம் செய்து கொண்டிருந்தார். நான் அவரது கன்னத்தில் அரை விட்டபோது, என்னை அவர் திட்டத் தொடங்கினார். 

இந்த காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்தனர். நான் உதவி கேட்டு கத்தினேன். யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை. மெட்ரோவை எண்ணி நான் அவமானம் அடைகிறேன். பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு மெட்ரோதான் சரியான இடம் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் இங்குதான் அருவருக்கத் தக்க சம்பவம் நடந்துள்ளது. பெண்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் தேவையில்லை. பாதுகாப்பான பயணத்தை அரசு அளிக்க வேண்டும். 

njcg9lo

குற்றச் சம்பவம் நடந்தபோது, குருகிராம் காவல் நிலையத்தின் ஃபேஸ்புக் மெசேஞ்சருக்கு தகவல் அனுப்பினேன். அவர்களது தகவலை படித்தார்கள். ஆனால் அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. 

இவ்வாறு அந்தப் பெண் கூறியுள்ளார். ட்விட்டரில் இந்தப் பதிவை அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு டேக் செய்திருக்கிறார். 

டெல்லியில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை மத்திய, மாநில அரசுகள் பாதிக்கு பாதி என்ற அளவில் கையாண்டு வருகின்றன. உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................