நாட்டில் 2-வது பெரிய கோடீஸ்வரரான விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ஓய்வு அறிவிப்பு!

விப்ரோ நிறுவனத்தில் செயல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக அசிம் பிரேம்ஜி உள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நாட்டில் 2-வது பெரிய கோடீஸ்வரரான விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ஓய்வு அறிவிப்பு!

விப்ரோ நிறுவனத்தை கடந்த 1960-களில் வளர்த்தெடுத்தார் அசிம் பிரேம்ஜி


நாட்டில் 2-வது பெரிய கோடீஸ்வரரும், விப்ரோ நிறுவனத்தின் அதிபருமான அசிம் பிரேம்ஜி ஓய்வை அறிவித்துள்ளார். தற்போது அவர் விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.

ஜூலை 30-ம்தேதி முதல் அவர் தனது பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரிஷாத் பிரேம்ஜி விப்ரோவின் செயல் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று, நிர்வாக கமிட்டி கூறியுள்ளது. 

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் அடுத்த மேலாண்மை இயக்குனராக அபிதாலி நீமுச்வாலா பொறுப்பேற்றுக் கொள்வார். அவர் தற்போது தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து வருகிறார். 

இந்த புதிய நிர்வாக மாற்றங்கள் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று விப்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகள் 0.65 சதவீதம் குறைவாக காணப்பட்டது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................