This Article is From Sep 16, 2019

தேவைப்பட்டால் ஜம்மு -காஷ்மீருக்கு நானே சென்று ஆய்வு செய்வேன் : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்

அவர் கூறியதாவது “மக்கள் உயர் நீதிமன்றத்தை அணுக முடியாதது என்பது தீவிரமான பிரச்சனை. நானே ஶ்ரீநகருக்கு வந்து பார்வையிடுவேன்” என்று தெரிவித்தார்.

தகவல் தவறாக இருந்தால் மனுதாரர் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார் (File)

ஹைலைட்ஸ்

  • ஜம்மு -காஷ்மீர் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை - குழந்தைகள் நல ஆர்வலர்
  • ஏன் அணுக முடியவில்லை.யார் தடுக்கிறார்கள் -தலைமை நீதிபதி
  • தேவைப்பட்டால் நானே நேரில் சென்று பார்வையிடுவேன்
New Delhi:

இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ‘தேவைப்பட்டால் ஜம்மு -காஷ்மீருக்கு வருகை தருவதாக' தெரிவித்துள்ளார். 

ஜம்மு -காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் -5ம் தேதியில் ரத்து செய்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் 370 பிரிவையும் திரும்ப பெற்றது. கடந்த 5-ம் தேதியிலிருந்து பல்வேறு கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டட்டன.

ஜம்மு காஷ்மீரில்  கட்டுபாடுகள் இருப்பதால் 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளின் நிலை குறித்து குழந்தைகள் உரிமை  ஆர்வலர் இனாஷி கங்குலி தொடர்ந்த பொது நல வழக்கில் “ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே அங்குள்ள உயர் நீதிமன்றத்தை அணுக இயலவில்லை” என்று தெரிவித்திருந்தார். “உயர்நீதிமன்றத்திற்கு செல்வது கடினமாகி விட்டது” என்று அவரின் வழக்கறிஞர் ஹூஸிஃபா அஹ்மதி கூறினார். 

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி “ஜம்மு -காஷ்மீர் உயர்நீதிமன்றத்திற்கு செல்வது ஏன் கடினமாகி விட்டது…?  யார் தடுக்கிறார்கள். இதற்கான பதிலை  ஜம்மு  காஷ்மீர் உயர்நீதிமன்றத்திடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தேவைப்பட்டால் ஜம்மு -காஷ்மீருக்கு நானும் வருகை தருவேன் என்று கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது “மக்கள் உயர் நீதிமன்றத்தை அணுக முடியாதது என்பது தீவிரமான பிரச்சனை. நானே ஶ்ரீநகருக்கு வந்து பார்வையிடுவேன்” என்று தெரிவித்தார். 

உயர்நீதிமன்ற நீதிபதி அறிக்கையை சமர்பிக்க உச்ச நீதி மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. “உயர் நீதிமன்றத்தை அணுகுவது கடுமையாக சிக்கல் இருப்பது என்ற தகவல் தவறாக இருந்தால் மனுதாரர் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார். 

உயர் நீதிமன்ற நீதிபதியிடமிருந்து அறிக்கை வந்த பின் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தருவதாக கூறியுள்ளார். 

.