''தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்'' - சீறும் வைகோ

இமயம் முதல் குமரி வரை உள்ள மக்கள் பிரதமர் நரேந்திரமோடி மீது கோபத்தில் உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்'' -  சீறும் வைகோ

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 27-ம் தேதி தமிழகம் வருகிறார். 

அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் தமிழக வருகை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 
நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மத்திய பாஜக அரசால் தமிழகத்திற்கு எண்ணற்ற துரோகங்கள் செய்யப்பட்டுள்ளன. குமரி முதல் இமயம் வரை உள்ள மக்கள் மோடி அரசு மீது, வேதனையும், எதிர்ப்பும், கசப்பும், வெறுப்பும் கொண்டுள்ளனர்.

தமிழகத்திற்கு கேடுகளை செய்த பிரதமர் மதுரைக்கு வரும்போது கருப்புக் கொடி காட்டுவோம். கலவரம் ஏதும் செய்ய மாட்டோம். 2019-ம் ஆண்டு இந்திய அரசியலில் திருப்பு முனை ஆண்டாக அமையும் என்று தெரிவித்தார். 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................