“விமானம் அனுப்புறேன் வந்து பாருங்க” என சொன்ன காஷ்மீர் ஆளுநருக்கு ராகுலின் பதிலடி!

ஒரு வாரத்துக்கு முன்னர் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்தது மத்திய அரசு

 Share
EMAIL
PRINT
COMMENTS

மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் அரசு சட்டம் இயற்றியுள்ளது.


New Delhi: 

ஜம்மூ காஷ்மீர் விவகாரம் குறித்து சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸின் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததற்கு, அம்மாநில ஆளுநர், சத்யபால் மாலிக், “நான் வேண்டுமானால் உங்களுக்கு விமானம் அனுப்புகிறேன். வந்து உண்மையை நிலைமையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல், “ஆளுநரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். என்னுடன் வரும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

அவர் மேலும், “எங்களுக்கு விமானம் வேண்டாம். ஆனால், சுதந்திரமாக ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் பறக்கவும், அங்கிருக்கும் மக்களை சந்திக்கவும் அனுமதி வேண்டும்.” என்றார்.

கடந்த திங்கட் கிழமை மாலிக், “ராகுல் காந்தி காஷ்மீருக்கு வரவேண்டும். அதற்கு அழைப்பு கொடுத்துள்ளேன். நான் உங்களுக்கு ஒரு விமானம் அனுப்புகிறேன். அதன் மூலம் உண்மையை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு பேசவும். நீங்கள் மிகவும் பொறுப்பான பதவியில் இருக்கிறீர்கள். நீங்கள் இப்படி பேசக் கூடாது” என்று தெரிவித்தார். 

ஒரு வாரத்துக்கு முன்னர் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்தது மத்திய அரசு. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதனால் அங்கு ஸ்திரத்தன்மையற்ற நிலைமை இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த ஆளுநர் மாலிக், “ 370வது சட்டப் பிரிவு ரத்து என்பது அனைவருக்குமானது. அது குறித்து மத ரீதியில் யோசிப்பது தவறு. ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் தவறான தகவல்களை அளித்து வருகின்றன. அனைத்து மருத்துவமனைகளும் திறந்துதான் இருக்கின்றன. அங்கு யாராவது குண்டு காயங்களுடன் இருக்கிறார்களா என்று பார்த்து நிரூபிக்கவும்” என்று விளக்கினார். 

காங்கிரஸ் எம்.பி சசி தரூரும் இது குறித்து பேசுகையில், “மாலிக் அவர்களே, ஏன் ராகுலை மட்டும் அழைக்கிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவர்களின் குழுவை ஜம்மூ காஷ்மீருக்குள் அழையுங்கள். அப்போது மாநிலத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்வோம்” என்று கூறியுள்ளார். 



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................