This Article is From Dec 15, 2018

''ரஃபேல் ஒப்பந்தத்தை பெற அனில் அம்பானிக்கு மோடி உதவியதை நிரூபிப்போம்'' - ராகுல்

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு வந்திருக்கும் நிலையில் ராகுல் காந்தி அதனை சவாலாக எடுத்துக் கொண்டுள்ளார்.

Rahul Gandhi also raised questions about the Supreme Court judgement referring to a CAG

New Delhi:

ரஃபேல் விவகாரத்தில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும்இல்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான கருத்தை தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், அனில் அம்பானிக்கு மோடி உதவி செய்து ரஃபேல் ஒப்பந்தத்தை பெற வைத்ததை, ஆதாரத்துடன் நிரூபிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் ரூ. 56 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ரஃபேல் விவகாரத்தில் தவறு நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே செய்யப்பட்டிருந்த ஒப்பந்த தொகையை அதிகரித்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் அடையும் வகையில் மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் தனியார் நிறுவனம் ஆதாயம் அடைந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தனது உத்தரவில், '' வழக்கை விசாரித்ததில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஊகத்தின் அடிப்படையில் இதுபோன்ற விவகாரங்களில் எங்களால் தலையிட முடியாது.'' என்று கூறியுள்ளனர்.

ரஃபேல் போர் விமானங்களை பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தில் ரூ. 56 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக மத்திய பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கருத்து எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை அளித்துள்ளது.

இந்த நிலையில், ரஃபேல் விவகாரம் குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் மோடியால் ஓடவும், ஒளிந்து கொள்ளவும் முடியும். ஆனால் தப்பிக்க முடியாது. விசாரணை நடத்தப்படும்போது உண்மை வெளிவரும். அனில் அம்பானிக்கு மோடி உதவினார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் என்றார்.

.