‘கொடநாடு விவகாரத்தை விடவேமாட்டேன்’- எடப்பாடிக்கு எதிராக மல்லுக்கட்டும் ஸ்டாலின்!

நீலகிரி நாடாளுன்றத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக ஸ்டாலின், நேற்று, காரமடை பகுதியில் பிரசாரம் செய்தார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘கொடநாடு விவகாரத்தை விடவேமாட்டேன்’- எடப்பாடிக்கு எதிராக மல்லுக்கட்டும் ஸ்டாலின்!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆவணப்படம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.


ஹைலைட்ஸ்

  1. நேற்று கோவையில் பிரசாரம் செய்தார் ஸ்டாலின்
  2. ஆ.ராசாவுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொண்டார்
  3. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமியை சரமாரியாக விமர்சித்தார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது, ‘கொடநாடு விவகாரத்தை நான் அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட மாட்டேன்' என்று சூளுரைத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர் இந்த கருத்தைத் தெரிவித்தார். 

நீலகிரி நாடாளுன்றத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக ஸ்டாலின், நேற்று, காரமடை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், ‘நான் ஒரு விஷயம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறேன். அதுதான் ‘கொடநாடு விவகாரம்'. இதுவரைக்கும் அல்ல, இப்போதும், இனிமேலும் கொடநாடு விவகாரத்தைப் பற்றி நான் தொடர்ந்து பேசுவேன். அந்த விவகாரத்தில் யார் குற்றவாளிகளோ, அவர்கள் சிறையில் அடைக்கப்படும் வரை நான் ஓயமாட்டேன்.

கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுதான் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒரு முதல்வர் மீது அரசியல் ரீதியாக விமர்சனங்கள் வரலாம். செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழலாம். அவர் கூறும் கருத்துகளுக்குக் கண்டனக் குரல்கள் எழலாம். ஆனால், ஒரு கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்படலாமா. அது முதல்வர் பதவிக்கு அழகா?' என்றார். 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஆவணப்படம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அப்போதிலிருந்து அவரைப் பதவி விலகச் சொல்லி திமுக தரப்பு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த விவகாரத்தை ஸ்டாலின் மீண்டும் நினைவுபடுத்திப் பேசியுள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................