தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா விஜயகாந்த்? சுதீஷ் பதில்

தமிழகம் முழுவதும் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார். ஆனால் பேச மாட்டார் என தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா விஜயகாந்த்? சுதீஷ் பதில்

மக்களவை தேர்தல் ஏப்ரம் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. அந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுக - பாஜக - பாமக கூட்டணியில் தேமுதிகவும் இணைந்துள்ளது. தேமுதிக கேட்ட தொகுதிகளை கொடுக்காததே இந்த இழுபறிக்கு முக்கிய காரணம் என்றும், பாமகவை விட குறைவான தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கியதால் அதனை ஏற்க மறுத்ததாலும் இந்த இழுபறி பேச்சுவார்த்தை நீடித்து வந்துள்ளது. இப்படி பெரும்பாடுபட்டு அதிமுக கூட்டணிக்குள் தேமுதிகவை பாஜக இழுந்து வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் கூறும்போது, தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீட்டில்தான் பிரச்சனை எழுந்தது. நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். மேல்சபையில் ஒரு இடம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனினும், நாங்கள் விரும்பிய தொகுதிகளை அதிமுக - பாஜக கூட்டணியில் தந்ததால் அதை ஏற்றுக்கொண்டோம்.

பாமக நிறுவனர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் கேப்டனை சந்தித்து பேசினார்கள். இதன் மூலம் இரு கட்சி தொண்டர்களும் தமிழகம் முழுவதும் அடிமட்ட அளவில் இணைந்து செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழக அரசியலில் இப்போதும் நாங்கள்தான் மாற்று சக்தியாக இருக்கிறோம். தற்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல். மக்கள் விருப்பத்திற்கேற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது.

அதிமுகவுடனான பேச்சுவார்த்தையின் போது, எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. திமுக தரப்பில் இருந்து அழைத்தனர். அவர்களிடம் நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த பேச்சுவார்த்தையின் போது, திமுகவினர் மிக மோசமான அரசியல் விளையாட்டை நடத்தி விட்டனர். 

விஜயகாந்த் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார். ஆனால் பேச மாட்டார். அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தாலே போதும் என்று கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள் என்று அவர் கூறினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................