This Article is From Dec 21, 2018

சென்னையில் பரவலாக மழை - நாளையும் நீடிக்க வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது

சென்னையில் பரவலாக மழை  - நாளையும் நீடிக்க வாய்ப்பு

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை நாளையும் நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்பட்டது. அது தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதேபோன்று சென்னையில் வானம் மேக மூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் சென்னையில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை அண்ணாசாலை, வேளச்சேரி, பாரிமுனை, சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தூரல் காணப்படுகிறது. நாளையும் இதே வானிலை நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல சிவகங்கை, தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்யப்பிருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் அடுத்து 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும். அது சொல்லிக் கொள்ளும்படி இருக்காது.

.