This Article is From Sep 25, 2018

"7 பேர் விடுதலையில் ஏன் தாமதம்?" - முத்தரசன் கேள்வி

முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராப்ர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்

சென்னை மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராப்ர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய கடந்த செட்பம்பர் 9 ஆம் தேதி தமிழக அமைச்சரவை முடிவு செய்திருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் (Mutharasan), மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுவிக்கும் வழக்கில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், 7 பேரின் விடுதலையை ஆளுநர் மூலமாக தடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தாமதமின்றி 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.