ஏன் நாய்க்கு புலி போல வர்ணம் தீட்டினேன்…? அல்டிமேட் தீர்வை சொல்லும் விவசாயி

விவசாயி தன் நாய்க்கு புலி போன்று வர்ணம் தீட்டி அழைத்து செல்கிறார்.

ஏன் நாய்க்கு புலி போல வர்ணம் தீட்டினேன்…? அல்டிமேட் தீர்வை சொல்லும் விவசாயி

புலி போன்று வர்ணம் தீட்டப்பட்ட நாய்.

Shivamogga, Karnataka:

கர்நாடாகவில் ஒரு விவசாயி தன் தோட்டத்தில் உள்ள காபி மற்றும் அர்கா பயிர்களை குரங்குகளிடமிருந்து பாதுகாக்க தனித்துவமான தீர்வை கண்டுபிடித்துள்ளார். 

சிவ்மோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி தாலுகாவில் உள்ள நளூரு கிராமத்தை சேர்ந்த ஶ்ரீகாந்த் கவுடா என்ற விவசாயி தன் நாய்க்கு புலி போன்று வர்ணம் தீட்டி அழைத்து செல்கிறார். இதனால் அவரது தோட்டத்திற்குள் குரங்குகள் வருவது வெகுவாக குறைந்துள்ளது. 

இது குறித்து ஶ்ரீகாந்த் கவுடா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய போது, “இதற்கு முன் கோவாலிருந்து மென்மையான புலி பொம்மைகளை வாங்கி வந்து தோட்டத்தில் வைப்பேன்.  குரங்குகள் வராமல் இருக்கும். சிறிது காலத்தில் நிறம் மங்கி விடும் மீண்டும் குரங்கள் வந்து விடும். இதற்கு முடிவு கட்டவே என் நாய் புல்புல்லை புலியாக தோற்றமளிக்கும் வகையில் அதன் முடிக்கு சாயம் பூசியுள்ளேன். காலை மாலை இருவேளையும் என் நாயினை அழைத்துச் செல்கிறேன். குரங்குகள் வருவதில்லை” என்று தெரிவித்தார். 

ஶ்ரீகாந்த் கவுடாவின் மகன் அமுல்யா  “என் தந்தையின் யோசனையை எங்கள் கிராமத்தில் பலரும் செயல்படுத்துகிறார்கள்” என்று பெருமையுடன் கூறினார்.

More News