This Article is From Aug 30, 2019

மிகப்பெரிய வங்கி மோசடியை அனுமதித்தது யார்? -பிரியங்கா கேள்வி

ரிசர்வ் வங்கியின் அறிக்கையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய வங்கி மோசடியை  அனுமதித்தது யார்? -பிரியங்கா கேள்வி

மிகப்பெரிய வங்கி மோசடியை நடக்க அனுமதித்த பொறுப்பாளர் யார்? (File)

New Delhi:

வங்கி மோசடி ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மிகப் பெரிய வங்கி மோசடியை எந்த பொறுப்பாளர்  அனுமதிக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 2018-19 ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில்  2018-19 ஆண்டில் வங்கி மோசடிகள் ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீதம் உயர்ந்து விட்டதாகவும் அதன் தொகை 73.8 சதவீதம் உயர்ந்து விட்டதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது. 

ரிசர்வ் வங்கியின் அறிக்கையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் “வங்கி மோசடி இந்த அரசின் கீழ் அதிகரித்துவிட்டதான் நாட்டின் வங்கித் துறையில் மிகப்பெரிய நிறுவனமான ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. கடந்த 2018-19 ஆண்டில் வங்கிக் கொள்ளை அதிகரித்துள்ளது. ஏறக்குறைய ரூ. 72,000 கோடி வங்கியில் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது போன்ற மிகப்பெரிய வங்கி மோசடியை நடக்க அனுமதித்த பொறுப்பாளர் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

.