This Article is From Nov 20, 2018

‘எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை!’ - வானிலை மைய இயக்குநர் பதில்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கான மழை குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

‘எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை!’ - வானிலை மைய இயக்குநர் பதில்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கான மழை குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாலச்சந்திரன், ‘நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இருந்தது. அந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு திசையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரமாக நகரும். அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. எனவே, அடுத்த 24 நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பான்மையான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 8 செ.மீ மழையும், மணிமுத்தாரில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

ணென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தார்.

.