ஃபரூக் அப்துல்லா எங்கே? : கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்

பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கான நடைமுறை குறித்து சட்டப்பிரிவு 230 மற்றும் 231 ஐ தயாநிதிமாறன் வாசித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஃபரூக் அப்துல்லா எங்கே? : கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்

தேசிய மாநாட்டின் தலைவரான ஃபரூக் அப்துல்லா உடல் நிலை சரியில்லாமல் அவரது வீட்டில் இருப்பதாக ஏ.என்.ஐ ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

New Delhi: 

ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து விவாதம் இன்று நடைபெற்றது. அதில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான தயாநிதிமாறன் ஶ்ரீநகர் சட்டமன்ற உறுப்பினர் ஃபரூக் அப்துல்லா இல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 

“நாடாளுமன்றத்தின் உறுப்பினரான ஃபாரூக் அப்துல்லாவை காணவில்லை. எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் கைது செய்யப்பட்டாரா எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. சபாநாயகர் நீங்கள் உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும். நடுநிலையாக செயல்படவேண்டும்” என்று பாராளுமன்றத்தில் தயாநிதிமாறன் பேசினார்.

தேசிய மாநாட்டின் தலைவரான ஃபரூக் அப்துல்லா உடல் நிலை சரியில்லாமல் அவரது வீட்டில் இருப்பதாக ஏ.என்.ஐ ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கான நடைமுறை குறித்து சட்டப்பிரிவு 230 மற்றும் 231 ஐ தயாநிதிமாறன் வாசித்தார்.

ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் மெஹபூபா முப்தி, ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு  அந்தஸ்தை வழங்கிய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்வது தொடர்பாக பதட்டமான சூழ்நிலையில் நேற்று கைது செய்யப்பட்டனர். மெஹபூபா முப்தி ஶ்ரீநகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து அரசின் விருந்தினர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................