எப்போது கிடைக்கும் அரசின் ரூ.2000 உதவித்தொகை? முதல்வர் பழனிசாமி பதில்

ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2000 இம்மாத இறுதிக்குள் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
எப்போது கிடைக்கும் அரசின் ரூ.2000 உதவித்தொகை? முதல்வர் பழனிசாமி பதில்

கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தால் பாதிக்கப்பட்ட, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழஙப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்குகளில் தலா ரூ.2000 செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ரூ.2000 வழங்கப்படுவது குறித்து இன்றயை சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, தேர்தலைக் கருத்தில் கொண்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படுவதாக கூறினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல என்றார்.

தொடர்ந்து, 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாமே என பொன்முடி மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கான இந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றும், தொழிலாளர்கள் மற்றும் ஏழை குடும்பங்களின் மீது அக்கறை கொண்டே இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த அறிவிப்பு சிறந்ததா? இல்லையா? என்பதை மட்டும் கூறுங்கள் என முதல்வர் கேட்டதற்கு, அறிவிப்பை எதிர்க்கவில்லை என்றும், 110ல் விதியின் கீழ் அறிவிக்காமல் பட்ஜெட்டில் அறிவித்திருக்கலாம் என்றும் பொன்முடி தெரிவித்தார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................