உயர் இரத்த அழுத்தமா? அதிக கவனம் தேவை!!

இரத்த அழுத்தம் என்பது உண்மையிலேயே நீங்கள் கவனமாக கையாள வேண்டிய ஒன்றுதான்.  

 Share
EMAIL
PRINT
COMMENTS
உயர் இரத்த அழுத்தமா? அதிக கவனம் தேவை!!

ஹைலைட்ஸ்

  1. 140 mm Hg மற்றும் 90 mm Hg உயர் இரத்த அழுத்தம் இருப்பதை உறுதி செய்கிறது.
  2. தொடர்ச்சியாக உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இருதய நோய்கள் வரக்கூடும்.
  3. வாழ்வியல் முறையில் ஒழுங்கை ஏற்படுத்தினால் இரத்த அழுத்தத்தை சரி செய்யலாம்

தற்போதைய வேலை பளு, பரபரப்பான வாழ்க்கை சூழல், மன அழுத்தம், உணவுமுறை ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல் காரணமாக மிக குறைந்த வயதிலேயே நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த நோய்கள் போன்றவை வந்து விடுகின்றன.  உடலில் உள்ள இரத்தம் தமணிகளில் வேகமாக பாயும் போது இதய செயல்பாடுகள் வழக்கத்திற்கு மாறாக செயல்படுகிறது.  தொடர்ச்சியாக இரத்த அழுத்தமானது 140/90 mmHg யாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  இரத்த அழுத்தம் என்பது உண்மையிலேயே நீங்கள் கவனமாக கையாள வேண்டிய ஒன்றுதான்.  

எப்போது கவனமாக இருக்க வேண்டும்?

இருதய நிபுணர்கள் இரத்த அழுத்தம் குறித்து கூறுகையில், தொடர்ச்சியாக 140 mm Hg மற்றும் 90 mm Hg யாக இருந்து கொண்டே இருக்கும்போது, உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதென்பதை உறுதியாக எடுத்து கொள்ளலாம்.  ஆனால் சில சமயங்களில் மட்டும், ஒன்றிரண்டு புள்ளிகள் அதிகமாக இருந்தால் உயர் இரத்த அழுத்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறதென்பதை புரிந்து கொள்ளுங்கள்.  

நீங்கள் கோபப்படும்போதோ அல்லது சண்டையிடும்போதோ உங்களுக்கு நிச்சயமாக இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.  இந்த நிலை வேறு.  ஆனால் நீங்கள் உறங்கும்போதோ அல்லது சாதாரணமாக இருக்கும்போதோ உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் நிச்சயம் உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை பெற்று கொள்வது கட்டாயம்.  

9ec9mti

இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, இருதய செயல்பாடு பாதிக்கும்.  இரத்தத்தில் வேகத்தால் உடலில் மற்ற உறுப்புகளிலும் பாதிப்பு அல்லது செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.  தொடர்ச்சியாக தலைவலி அல்லது மூக்கில் இரத்த கசிவு ஏற்படுவதெல்லாம் இரத்த அழுத்தத்தின் அறிகுறி.  இதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் மிகவும் ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள்.  சில சமயங்களில் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் இரத்த கசிவு ஏற்படும்.  இதனால் பக்கவாதம் ஏற்படும்.  மேலும், இருதய நோய்கள், மாரடைப்பு போன்றவை ஏற்படும்.  சிலருக்கு கண் பார்வை போகும் நிலையும் ஏற்படும்.  

இந்த நிலைமைக்கு போகாமல் தடுக்க, உடனடியாக மருத்துவரை அனுகி உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.  உயர் இரத்த அழுத்தத்தை சரிசெய்ய யோகா, பிராணாயாமம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.  உணவு பழக்கம், தூக்கம் ஆகியவற்றையும் சீராக இருக்கும்படி பார்த்து கொள்வதும் அவசியம்.  சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................