60,000 ஆண்டுகளாக தனித்திருக்கும் சென்டினெலிஸ் மலைவாழ் மக்கள் யார்?

1960ம் ஆண்டு முதல் இவர்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுவருகிறது. ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளது. அவர்கள் தனித்திருப்பதில் தீர்க்கமாக உள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
60,000 ஆண்டுகளாக தனித்திருக்கும் சென்டினெலிஸ் மலைவாழ் மக்கள் யார்?

2004 சுனாமி தாக்குதலின் போதுகூட அவர்கள்  யார் உதவியையும் ஏற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் உதவிக்கு வந்த ஹெலிகாப்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


New Delhi: 

சென்டினெலிஸ் எனும் மலைவாழ் மக்கள் உலக மக்களின் தொடர்பின்றி 60,000 ஆண்டுகளாக மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களாவார்கள். அவர்கள் அந்தமான் நிகோபர் பகுதியில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவரை அம்பு ஏய்து கொன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. வடக்கு சென்டினெல் தீவு தான் இவர்கள் வாழும் பகுதி. "இந்தப் பகுதி பார்வையாளர்கள் பார்வையிடும் பகுதியல்ல" என்று அறிவிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. 

ஜான் ஆலன் சாவ் எனும் அமெரிக்கர் தான் அம்பு ஏய்தி கொல்லப்பட்டுள்ளார் என்று கண்டறிந்தபின், கருத்து தெரிவித்துள்ள போலீஸார், "அவர்கள் இந்தியாவின் பாதுகாக்கப்படும் சமூகத்தினர். அவர்களை பற்றிய ஆய்வு 30 வருடங்களாக நடந்து வருகிறது. ஆனாலும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அடிப்படை தகவல்கள் மட்டுமே உள்ளது" என்று கூறியுள்ளனர். 

1. சென்டினெலிஸ், ஆப்பிரிக்காவிலிருந்து ஆரம்ப காலத்திலேயே  இடம்பெயர்ந்தவர்கள். இவர்களது மொழியை மற்ற மலைவாழ் மக்கள் கூட புரிந்து கொள்ள முடியாது. 

2. அவர்கள் போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கே 50 கிமீ தொலைவில் வாழ்கிறார்கள். இவர்களது மொத்த மக்கள் தொகை 150க்குள் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

3. 60,000 ஆண்டுகளாக மக்கள் தொடர்பு இல்லாமல் வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரமாக மீனும், தென்னையும் உள்ளது.

4. இவர்கள் மனித தொடர்பற்று இருப்பதால், பார்வையாளர்களிடம் உள்ள சாதாரண காய்ச்சல் கூட மொத்த இனத்தையும் அழித்துவிடும் அபாயம் உள்ளது.

5. 1960ம் ஆண்டு முதல் இவர்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுவருகிறது. ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளது. அவர்கள் தனித்திருப்பதில் தீர்க்கமாக உள்ளனர்.

6. இவர்களுடன் நெருங்கி பழகிய ஒரே மனிதர் த்ரிலோக்நாத் பண்டிட்(1991) மட்டுமே.

7. 1981ம் ஆண்டு எம்.வி ப்ரைம்ரோஸ் கப்பல் இப்பகுதியில் சிக்கி கொண்டு ஒரு வார போராட்டத்துக்கு பின் அந்த கப்பலில் உள்ளவர்கள் இந்திய ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

8. 2006ம் ஆண்டு இரண்டு மீனவர்களை இந்த மலைவாழ் மக்கள் கொன்றுள்ளனர். மேலும் 2004 சுனாமி தாக்குதலின் போதுகூட அவர்கள்  யார் உதவியையும் ஏற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் உதவிக்கு வந்த ஹெலிகாப்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

9. இந்திய அரசாங்கம் அவர்கள் தனித்திருப்பதை யாரும் துன்புறுத்தக்கூடாது மற்றும் தொடர்புகொள்ளக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளது. 

10. ஆனால் இந்த வருட ஆரம்பத்தில் இந்த தீவு உட்பட 28 இடங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் அனுமதி மறுப்பு தடையை டிசம்பர் 31,2022 வரை நீக்கியது. அதன்படி பார்த்தால் இங்கு வெளிநாட்டவர் அனுமதி செல்லும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................