விபத்திற்கு முன்பு மெதுவாக சென்ற மற்றொரு ரயில் - பஞ்சாப் துயரம் தொடர்பான புதிய தகவல்கள்

பஞ்சாபில் நடந்திருக்கும் ரயில் விபத்து தொடர்பாக புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

விபத்தை நேரில் பார்த்தவர்களின் செல்ஃபோன் வீடியோ காட்சி


Amritsar: 

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் ஏற்பட்டிருக்கும் ரயில் விபத்திற்கு சற்று முன்னதாக மற்றொரு ரயில் ஒன்று மெதுவான வேகத்தில் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் ரயில் வேகமாகச் சென்றதுதான் விபத்திற்கான காரணமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

சம்பவம் நடந்த நேற்று மாலை 6.45-க்கு சற்று முன்னதாக ரயில் ஒன்று மெதுவான வேகத்தில் சென்றுள்ளது. அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் புறப்பட்ட அந்த ரயில், சம்பவம் நடந்த 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஜோதா பதக் பகுதியின் வழியே மெதுவாகச் சென்று மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரை நோக்கி புறப்பட்டது.

ஆனால் விபத்தை ஏற்படுத்தி 60 பேரின் உயிரைக் குடித்த ரயில் பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து அதிவேகமாக அமிர்தசரஸை நோக்கி சென்றது. இதனால் ரயிலின் வேகம்தான் விபத்துக்கான காரணமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நேரில் பார்த்தவர்கள் பதிவு செய்த வீடியோவில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. முதல் ரயில் சற்று மெதுவாக திருவிழா நடந்த இடத்தை கடந்து செல்கிறது. அதன்பின்னர் அதிவேகமாக வந்த ரயில்தான் மக்கள் கூட்டத்தின் மீதேறி சென்று விபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 

256seuqo

பட்டாசு சத்தம் மற்றும் கொண்டாட்டங்களுக்கு இடையே ரயில் வரும் சத்தத்தை மக்கள் கேட்காததால் இந்த விபத்து நேரிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே போர்டு தலைவர் அஷ்வனி லோஹானி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

சம்பவம் நடந்திருக்கும் இடத்தில்தான் கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் தசரா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்தாண்டுதான் விபத்து நேர்ந்திருக்கிறது.

விபத்து தொடர்பாக லோஹானி அளித்துள்ள பேட்டியில், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில்தான் ரயில் சென்றுள்ளது. ஆனால் மக்கள் தண்டவாளத்தில் நிற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இரு ரயில் நிலையங்களுக்கு இடையில்தான் இந்த விபத்து நேரிட்டுள்ளது. எனவே ரயிலின் நிர்ணயிக்கப்பட்ட வேகம் குறைவானது என கருத முடியாது. முதல்கட்ட விசாரணையில், மக்கள் கூட்டத்தை பார்த்ததும், ரயிலின் ஓட்டுனர் வேகத்தை 90 கிலோ மீட்டரில் இருந்து 60-65 கிலோ மீட்டருக்கு குறைக்க முயற்சித்துள்ளார். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
விபத்தை தொடர்ந்து 37 ரயில்கள் ரத்து செய்யயப்பட்டன. 16 ரயில்கள் தடம் மாற்றி இயக்கப்பட்டன.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................