என்ன ஆனது தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை? ஜெயக்குமார் விளக்கம்

கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது, தேமுதிகவுக்காக காத்திருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
என்ன ஆனது தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை? ஜெயக்குமார் விளக்கம்

முன்னதாக, நேற்று தேமுதிக நிர்வாகிகள், திமுக பொருளாளர் துரைமுருகனை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தனர். இந்த

சந்திப்பு முடிந்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், ‘தேமுதிக நிர்வாகிகள் மீண்டும் கூட்டணியில் வருவது

குறித்துதான் பேசினர். எங்களுக்கும் அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தொகுதிப் பங்கீடு

முடிந்துவிட்டது. இனி கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டேன்' என தெரிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, திமுகவுடனும் தேமுதிக நிர்வாகிகள் பேச்சு நடத்தியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்டது என நேற்றைய தினம் தமிழகத்தில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, தேமுதிகவுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை தொடர்கிறது. எங்களுக்கான கூட்டணி கதவை மூடவில்லை. தேமுதிகவுக்காக காத்திருக்கிறோம்.

அதிமுக எனும் போயிங் விமானத்தில் ஏறிய அனைவருக்கும் சீட் கொடுத்துவிட்டோம். தேமுதிக வந்தால் டெல்லி புறப்பட்டு விடும். எனவே, அதிமுகவுடன் கூட்டணியா, இல்லையா? என்பதை இனி முடிவு செய்யவேண்டியது தேமுதிக தான் என்று அவர் கூறினார்.

மேலும், கூட்டணி தொடர்பாக தேமுதிக பேச்சு நடத்தியதை திமுக வெளியே சொல்லியிருக்க கூடாது. அரசியல் நாகரிகமின்றி திமுக வெளிப்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................