பாலக்கோட்டில் நடந்தது என்ன? விவரிக்கும் சாட்டிலைட் படங்கள்!

பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதில் பெரும் அளவிலான தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் இந்தியா கடந்த செவ்வாய்யன்று தெரிவித்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

2000 குண்டுகளுடன் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிரேஜ் 2000 போர் விமானம்.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமை இந்தியா தாக்கியது.
  2. சந்தேகங்களுக்கு பதிலளிக்க இந்தியாவிடம் புகைப்படங்கள் உள்ளதாக தெரிகிறது.
  3. துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக புள்ளிகள் தெரிவிப்பதாக தகவல்கள்.

இந்திய எல்லைகோட்டு பகுதியை தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் ஜெய்ஷ்-இ-முகமது முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய தெரிவித்தது. எனினும், இதுகுறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கு மம்தா உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் இந்திய விமானப்படைக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு பாலக்கோட் தாக்குதல் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது 12 இந்திய ஜெட் போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்கள் தொடர்பான சாட்டிலைட் படங்கள் வெளியிடுவதை அரசால் மிகவும் இரகசியமாக கருதப்படுகிறது.

எல்லைக்கோட்டு பகுதியை தாண்டி 20 கிமீ. தொலைவில் உள்ள பாலக்கோட்டு பகுதியில் பிப்.26 அதிகாலையில் புகுந்து கணினி மூலம் இயக்கப்பட்ட ஸ்பைஸ் 2000 குண்டுகளை பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் வீசித் தாக்கியதாகவும். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகள் இலக்கைத் தவறவிட வாய்ப்பே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிரேஜ் போர் விமானத்தில் பயன்படுத்தப்பட்ட இஸ்ரேலி குண்டுகள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் கைபர் பாக்தூன்குவா மாகாணத்தில் பாலகாட்டிற்கு அருகே உள்ள பிசியன் நகரத்தின் மேற்குப் பகுதிக்கு ஸ்பைஸ் 2000 சறுக்கு குண்டுகள் ஐந்து தனித்தனி கட்டமைப்புகளைத் தாக்கியுள்ளன என்று இரண்டு வெவ்வேறு மூலங்களிலிருந்து அரசாங்கத்தால் பெறப்பட்ட சித்திரங்கள் மூலம் சாத்தியமானவை என்று NDTV அறிந்துள்ளது.

இதன் மேல் உள்ள சிறு துளைகள் மூலமே குண்டுகள் குறிபார்த்து தாக்கப்பட்டு தீவிரவாத முகாம்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் 2000 ஒரு அழிக்கும் ஆயுதம். இதன் துல்லியமான செயலின் மூலம் எதிரியின் முகாமை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

fb7pj3n

ஸ்பைஸ் 2000களில் சிலவற்றை அது தாக்கிய முழு அமைப்பையும் கீழே கொண்டு வரவில்லை.

குண்டுவெடிப்புக்கு முன்னும் பின்னும் இருந்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குண்டுகள் அந்த கட்டடத்தில் இருந்தவர்களை அதிர்ச்சிகரமான மரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கியிருந்தனர். பாகிஸ்தானை ஏமாற்றுவதற்காக பஞ்சாபில் இருந்து புறப்பட்ட சுகோய் விமானங்கள் ஜெய்ஷே முகமது தலைமையகமான பஹாவல்புர் நோக்கி செலுத்தப்பட்டன. பாகிஸ்தான் விமானங்கள் அவற்றை விரட்டிச் சென்றதால் சுகோய் விமானங்கள் திரும்பி விட்டன.

nfpobeg

இந்திய ராணுவ நிலையங்களை நோக்கி தாக்குதல் நடத்த முயன்ற 24 பாகிஸ்தான் போர் விமானங்களை, இந்தியாவை சேர்ந்த 7 போர் விமானங்கள் தடுத்து நிறுத்தி, பதில் தாக்குதல் மேற்கொண்டது. இதில் மிக்-21 ரக போர் விமனாம் மூலம் அத்துமீறி புகுந்த பாகிஸ்தான் f-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................