This Article is From Nov 25, 2019

தேவேந்திர ஃபட்னாவிஸ் - அஜித் பவார் நள்ளிரவு சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது என்ன?

அஜித் பவாருடனான சந்திப்பில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கவில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் தனது ட்வீட்டரில் தெளிவுபடுத்தியுள்ளது.

மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவராணம் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.

Mumbai:

மும்பையில் உள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ் இல்லத்தில் நேற்றிரவு அஜித் பவார் திடீர் ஆலோசனை மேற்கொண்டது, பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. 

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சி, 'காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடிவு' செய்துள்ளது என சரத்பவார் திட்டவட்டமாக உள்ளதாக கூறியதை தொடர்ந்து, அஜித் பவார் - தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு நடைபெற்றது. 

எனினும், இந்த சந்திப்பு குறித்து மகாராஷ்டிராவின் முதல்வர் அலுவகலம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், அஜித் பவாருடனான சந்திப்பில் ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது, மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவராணம் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.


முன்னதாக, மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது. 

பாஜகவும் - சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், அதிகாரப்பகிர்வு மோதல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷா சிவசேனாவுடம் கொண்ட ஒப்பந்தத்தின் படி, 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட அம்சங்களை சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தியது. 

oangjp7

நேற்றிரவு தேவேந்திர ஃபட்னாவிஸை சந்திக்க அவரது இல்லம் சென்ற அஜித் பவார். 


எனினும், பாஜக இதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது. இதற்காக தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதையடுத்து, சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவே முதல்வராக 5 வருடமும் இருப்பார் என்று தகவல் வெளியானது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக
பதவியேற்றுள்ளார். 

இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மக்களின் 'முதுகில் குத்திவிட்டார்' சரத்பவாரின் மருமகன் அஜித் பவார் என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார். 

இந்த ஆட்சியமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் ஃபட்னாவிஸ் - அஜித் பவார், மகாராஷ்டிர ஆளுநரிடம்சமர்பித்த ஆதரவுக் கடிதங்களை இன்று காலை, 10,30 மணிக்கு தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

.