This Article is From May 17, 2019

அமெரிக்காவில் இறந்து மிதந்த 58 சாம்பல் நிற திமிங்கலங்கள்- பின்னணி என்ன?

கலிபோர்னியாவில் இருந்து அலாஸ்கா வரையில் நீண்டுள்ள அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் மட்டும், இந்த ஆண்டில்,  இதுவரை, 58 திமிங்கலங்கள் இறந்துள்ளன.

அமெரிக்காவில் இறந்து மிதந்த 58 சாம்பல் நிற திமிங்கலங்கள்- பின்னணி என்ன?

வெப்பத்தின் காரணமாக உயிரிழக்கும் திமிங்கலங்கள்

Alaska:

சமீப வாரங்களில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில், சாம்பல் நிற திமிங்கலங்கள் கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கி வருகிறது. இதற்கு காரணமென அறிவியலாளர்கள் குறிப்பிடுவது, புவி வெப்பமடைதலைத்தான். புவி வெப்பமடைவதால், பனிப்பாறைகள் உருகி அங்குள்ள நீரும் வெப்பமடைகிறது. தற்போது, அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்களுக்கு காரணமாக பார்க்கப்படுவது, அலாஸ்காவிற்கு, அருகிலுள்ள, ஆர்டிக் பெருங்கடலின் தண்ணீர் வெப்பமடைந்ததுதான்.

என் ஓ ஏ ஏ (NOAA) எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தகவல் அடிப்படையில், கலிபோர்னியாவில் இருந்து அலாஸ்கா வரையில் நீண்டுள்ள அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மட்டும், இந்த ஆண்டில்,  இதுவரை, ஐம்பத்து எட்டு சாம்பல் நிற திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. அலாஸ்கா வளைகுடாவின் ஒரு பகுதியான டர்கெயின் ஆர்ம் என்னும், பனிப்பாறைகளாலான ஒரு கால்வாய் போன்ற இடத்தில், இந்த வாரத்தின் புதன்கிழமை அன்று ஒரு சாம்பல் நிற திமிங்கலம் இறந்து காணப்பட்டுள்ளது, என இந்த என் ஓ ஏ ஏ அமைப்பு சமீத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. கடந்த இரு வாரங்களில் மட்டும், இந்த பகுதியில் இறந்து காணப்படும் இரண்டாவது திமிங்கலம் இது.

0fc504j8


குளிர்காலத்தில் தங்கள் வாழ்விடமாக கொண்டுள்ள மெக்சிகோவின் கடல்பகுதியில் இருந்து வடக்கு நோக்கி திமிங்கலங்கள் பயனிக்கையில், அங்குள்ள வெப்பத்தின் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என என் ஓ ஏ ஏ-ன் செய்தி தொடர்பாளர், மைக்கல் மில்ஸ்டெய்ன்(Michael Milstein), கடந்த வியாழக்கிழமை இது குறித்து பேசுகையில் கூறியுள்ளார். இறந்துபோன திமிங்கலங்களை ஆராய்ந்து பார்க்கையில், அந்த திமிங்கலில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம், இந்த திமிங்கலங்கள், கடந்த வருட கோடை காலத்தில் அலாஸ்கா கடல்பகுதியில் பெரிங் மற்றும் சுக்சி ஆகிய இடங்களை, வாழ்விடமாக அமைத்துக் கொண்ட இடத்தில், போதுமான அளவு உணவு உட்கொள்ளாதது தான் எனவும் மைக்கல் கூறியுள்ளார். இந்த இடங்களில்தான், அந்த திமிங்கலங்கள் அதிக உணவை எடுத்துக்கொள்ளும் என்றும், அந்த உணவுதான் அடுத்த காலம் வரை இந்த திமிங்கலங்கள் உயிருடன் இருக்க உதவும் எனவும் அவர் கூறியுள்ளார். "அந்த இடங்களில் ஏதோ ஒன்று ஏற்பட்டுள்ளது, அதனால்தான் திமிங்கலுக்கும் போதுமான உணவு கிடைக்கவில்லை என பலரும் எண்ணுகிறார்கள்" எனவும் மைக்கல் கூறியுள்ளார்.

ஒருபுறம் கடல் நீரின் வெப்பத்தின் அளவு உயர்ந்ததன் காரணமாகத்தான் இந்த திமிங்கலங்கள் இறந்தன என்றாலும், மறுபுறம் போதுமான அளவு உணவு உட்கொள்ளாததுதான் இந்த இறப்பிற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. 

"இந்த வடக்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள சாம்பல் நிற திமிங்கலங்களின் எண்ணிக்கை என்பது, 27,000 வரையில் உயர்ந்துள்ளது. அதனால், அந்த திமிங்கலங்கள் உணவிற்காகப் போராடி வருகிறது. இன்னும் பல திமிங்கலங்கள் உயிரிழக்கலாம்" என்று மைக்கல் கூறுகிறார்.

எப்படி இருந்தாலும், திமிங்கலங்களின் இனப்பெருக்கம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெரும் சாதாரணமான ஒரு நிகழ்வுதான். கடந்த ஆண்டுகளிலும், இந்த திமிங்களிங்களின் எண்ணிக்கை 20-25 ஆயிரங்களிலேயே இருந்துள்ளது. ஆனால், தற்போது மட்டும் அந்த திமிகலங்களுக்கு உணவு இல்லை என்று கூறப்படுவது, அங்குள்ள உணவு சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பாகத்தான் பார்க்கப்பட வேண்டியுள்ளது. 

இந்த பகுதிகள், கடந்த சில வருடங்களில் வேப்பத்தின் இரு துவங்களின் உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து, கோடைகாலத்தில், என்றும் இல்லாத அளவு இந்த இடங்களில் நீர் வெப்பமாகியுள்ளது. மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு, 150 வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்த அளவு வெப்பத்தை அடைந்துள்ளது. 

தட்ப வெப்ப ஆராய்ச்சியாளர், ரிக் தாம்சன், இது குறித்து, "அங்கு ஏற்பட்டுள்ள வெப்ப மாற்றங்களால், ஆல்கேயிலிருந்து க்ரில்(Krill) வரையிலான அனைத்து உயிரிங்களில் உணவு சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். இந்த பாதிப்பு என்பது, அங்குள்ள பல்லுயிர் பெருக்கத்தின், அனைத்து உணவு சங்கிலிகளையும் பாதிக்கும் என்பது, கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்'' என்கிறார். 

.